தங்கம் என்பது, இந்தியர்களை பொறுத்தவரை அழகு ஆபரணமோ ஆடம்பர பொருள் மட்டுமோ கிடையாது. இது, பலருக்கு ஒரு பெரிய முதலீடாக இருக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். திருமணத்திற்கு மட்டுமன்றி, அவசர மருத்துவ செலவுகள், வேறு ஒரு சொத்துகளை வாங்குவதற்கு முதலீடாகவும் இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நகைகளாக இருந்தாலும் பணமாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் வீட்டில் வைத்திருந்தால், வருமான வரி தொடர்பான பிரச்சனைகள் வரலாம். அதிலும், ஆண்கள், பெண்கள், திருமணம் ஆனவர்கள் ஆகாதவர்கள் என அனைவருக்கும் தனித்தனி விதிமுறைகள் இருக்கின்றன. 


>திருமணம் ஆன பெண்கள் எவ்வளவு வைத்திருக்கலாம்?
திருமணம் முடித்த பெண்கள், 500 கிராம் வரை தங்க ஆபரணங்கள் வைத்திருக்க அனுமதி இருக்கிறது.
>திருமணம் ஆகாதவர்கள் எவ்வளவு வைத்திருக்கலாம்?
திருமணம் ஆகாத பெண்கள், சுமார் 250 கிராம் வரை தங்க நகைகளை வைத்திருக்க அனுமதி இருப்பதாக கூறப்படுகிறது.
>ஆண்களுக்கான விதிமுறைகள்:
ஆண்கள், திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் ஆகாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு 100 கிராம் வரை தங்க நகைகளை வைத்திருக்க அனுமதி இருப்பதாக கூறப்படுகிறது. 


இந்த வரம்புகளுக்கான காரணங்கள் என்ன?


இந்த நகைக்கான வரம்புகள் ஏன் விதிக்கப்பட்டிருக்கிறது என்ற பலருக்கு சந்தேகம் எழலாம். மக்கள் வாங்கும் தங்கத்தின் உரிமை வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் கணக்கில் காட்டப்படாமல் இருக்கும் செல்வம் வரம்புக்கு  உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வரம்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வரம்புகளை தாண்டி, ஒருவரிடம் தங்க நகைகள் இருந்தால் அதற்கான உரிய சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும். இது, வரிக்கட்டும் சமயங்களில் கைக்கொடுக்கும். 


மேலும் படிக்க | ஏடிஎம் வச்சிருக்கீங்களா? அப்போ 10 லட்சம் ரூபாய் கிளைம் செய்யலாம்! தெரிந்து கொள்ளுங்கள்


ஏற்ற இறக்கத்தில் தங்கத்தின் விலை..


தங்கத்தின் விலை, கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை நேற்று  360 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரனுக்கு 53 ஆயிரத்து 280 ரூபாயாக விற்கப்பட்டது. அட்சய திருதியை என்பதால், நேற்று காலையில் இருந்து நகைக்கடைகளில் மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். சுமார் 58 ஆயிரத்தை தாண்டிய தங்க விலை, கடந்த சில நாட்களக சரசரவென குறைகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தங்க விலை சீக்கிரமாக பழைய நிலைக்கு திரும்பும் என கூறப்படுகிறது. 


ஒருவரின் மொத்த வருமானம் ரூ.50 லட்சத்திற்கு மேலாக இருந்தால் அவர் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, சொத்துகளின் பட்டியலில் கையிருப்பில் இருக்கும் தங்கத்தையும் குறிப்பிட வேண்டும். திருமனத்தின் போது பெற்ற பரிசாகவோ, அல்லது குடும்ப உயிலின் ஒரு பகுதியாகவோ இருந்தால் அதற்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | NPS: ஓய்வுக்கு பிறகும் ஒய்யாரமா வாழலாம்.... இதன் அட்டகாசமான நன்மைகளின் பட்டியல் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ