Gold Price Today, 17 April 2021: ஏறுமுகத்தில் தங்கம், சென்னையில் இன்றைய பொன் விலை
இன்றைய வர்த்தகம் தொடங்கியதுமே தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது, சென்னையில் இன்றைய பொன் விலையில் சிறிது அதிகரிப்பு காணப்படுகிறது.
Gold Price Today 17 ஏப்ரல் 2021: தங்கத்தின் விலை பத்து கிராமுக்கு 44,950 என்ற அளவில் இருக்கிறது.உயர்ந்துள்ளன. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கேரளாவில் தங்கத்தின் விலை இன்று 22 காரட்டுக்கு ரூ .44,000 ஆகவும், 24 காரட்டுக்கு ரூ .48,000 ஆகவும் உள்ளது.
தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்து வந்த நிலையில், சனிக்கிழமை (17 April 2021) தங்கத்தின் விலை 100 கிராமுக்கு ரூ .900 அதிகரித்து 4,49,500 ரூபாயாக உள்ளது என்று குட் ரிட்டர்ன்ஸ் வலைத்தளம் தெரிவித்துள்ளது.
22 காரட் தங்கத்தின் 10 கிராம் விலை ரூ .90 அதிகரித்து, 44,950 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் 22 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ .44,190 க்கு விற்கப்பட்டது. டெல்லியில், 22 காரட் தங்கத்தின் விலை ரூ .46,150 ஆகவும், மும்பையில் ரூ .44,950 ஆகவும் விற்பனையாகிறது. முதலீட்டிற்கான சிறந்த வழியாக பார்க்கப்படுவதால், 24 காரட் தங்கத்திற்கும் கிராக்கி அதிகமாகியிருக்கிறது.
Also Read | நட்ட மரங்களும் வாடுகிறது… சிரிப்பு செத்துவிட்டதே!
பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கேரளாவில் தங்கத்தின் விலை இன்று 22 காரட்டுக்கு ரூ .44,000 ஆகவும், 24 காரட்டுக்கு ரூ .48,000 ஆகவும் உள்ளது.
அமெரிக்கா, பொருளாதார நடவடிக்கைகளில் தொடர்ந்து முன்னேற்றத்தை பதிவு செய்தால், ஏப்ரல் மாதத்தில் DX மற்றும் 10Y பத்திர வருவாய் அதிகரித்து, அதன் தாக்கம் தங்க விலையில் அதிகம் தென்படும். இருப்பினும், உச்ச வரம்புகளிலிருந்து தங்கம் இப்போது கணிசமாக குறைந்துள்ளது. ஆகையால், இந்த நேரத்தில் சில்லறை வியாபார பங்களிப்பு, ஆபரணத் தங்கத்தின் வடிவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ALSO READ: Gold Desire: நிறைய தங்கம் வாங்கி சேர்க்க ஆசையா? இது பெண்களுக்கான பொன் விரதம்
தங்க விலையில் குறிப்பிடத்தக்க ஏறுமுகம் 2016 ஆம் ஆணடில் துவங்கியது. தங்கத்தைப் பொறுத்தவரை, இந்தியாவில் அதன் போக்கு ஏற்றத்துடனே இருக்கும் என்பது சந்தை நிபுணர்களின் கணிப்பாகும். 2016 ஆம் ஆண்டு துவங்கிய தங்கத்தின் ஏற்றமான போக்கு இன்னும் தொடர்கிறது. மேலும் விலை அதிகமாவதற்கான அறிகுறிகள் தற்போது தெரிய வருகின்றன.
தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் காரணம் என்றாலும், அவற்றில் முக்கியமாக, பெரிய ஊக்குவிப்பு தொகுப்புகள், மிகக் குறைந்த குறுகிய கால வட்டி விகிதங்கள், குறைவான நீண்ட கால விகிதங்கள் மற்றும் கோவிட் -19 (COVID-19) தொற்றுநோயால் குறைந்து வரும் பொருளாதார தேவை ஆகியவை அடங்கும்.
ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR