சென்னை: நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணம் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேரில் சென்று அஞ்சலி செலுத்துபவர்களின் கூட்டம் அவரது வீட்டில் கூடியிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் விருகம்பாக்கத்தில் உள்ள விவேக்கின் வீட்டிற்கு நேரடியாக சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
பலரும் தங்கள் துக்கத்தை பகிர்ந்துக் கொள்கின்றனர். சமூக ஊடகங்களில் #RIPVivek என்ற ஹேஷ்டேக் வைரலாகிறது.
அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!
திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!
மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.
கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’ கதாநாயகன்…
என திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் சமூக ஊடங்களில் வைரலாகிறது.
அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க் கதாநாயகன்.— வைரமுத்து (@Vairamuthu) April 17, 2021
Also Read | சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும்..
தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை நான்கு முறைபெற்றவர் நடிகர் விவேக்.
OMG..cant believe I woke up to this Shocking news abt Legendary @Actor_Vivek sir
Heartbreaking..Greatest Comedian of our Times who always incorporated a Social Message into his COMEDY
I hav always been his diehard FAN
U wl live in our Hearts forever dear Sir#ripvivek pic.twitter.com/4ferfSsgDm
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) April 17, 2021
திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் விவேக்கின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
'சின்னக் கலைவாணர்' @Actor_Vivek அவர்களின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.
தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். சூழலியல் ஆர்வலர். ஆற்றல்மிகு நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாகப் பறித்ததேன்?
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்! pic.twitter.com/JFARJPEj2e
— M.K.Stalin (@mkstalin) April 17, 2021
2009ல் பத்ம விருதும் அவரைத் தேடி வந்தது. பத்மஸ்ரீ விருது பெற்ற நகைச்சுவை நாயகன். பல பிரபலங்களும் நடிகர் விவேக்கிறகு சமூக ஊடகங்கள் மூலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Rest in peace Legend #RIPVivek pic.twitter.com/Bd0zKBMv9I
— Actor Vijay Fans Page (@ActorVijayFP) April 17, 2021
உலக நடிகர் கமலஹாசனின் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்கவிருந்தார் விவேக்.
Also Read | நேற்று தடுப்பூசி, இன்று மாரடைப்பு; நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR