Today Gold Rate: உலகளாவிய கொரோனா அச்சம் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது. இதனால் வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை (Gold Prices)  உயர்ந்துக் கொண்டே சென்றது. நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தங்கத்தின் விலை (Gold Rate In India) தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு பிரச்சனை மற்றும் அமெரிக்க டாலர் (USA Dollar) மதிப்பு காரணமாக தங்கத்தின் விலை மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது. 10 கிராம் தங்கம் 50,690 ஆக விலை குறைந்து. விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்தது. மூன்று நாட்களில் தங்கம் 10 கிராமுக்கு சுமார் ரூ. 800 வரை குறைந்துள்ளது.


ALSO READ | 


பூமியில் உள்ள அனைவரும் கோடீஸ்வரர்களா! நிஜமாகப் போகும் கற்பனைக்கு வித்திடும் நாசா...


Gold ETF: தங்கத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெற அருமையான Tips!!


தமிழகத்தில் நேற்று காலையில் சற்று தங்கத்தின் விலை (Chennai Gold Rate) சவரனுக்கு ரூ.88 உயர்ந்தது. பின்னர் கிராமிற்கு ரூ. 53 குறைந்து. ஆனால் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையில் 424 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்தவித மாற்றமும் இருக்காது. ஏனென்றால் சனி மற்றும் ஞாயிறும் விடுமுறை தின என்பதால், அடுத்த விலை மாற்றம் திங்கள் காலை தான் இருக்கும்.


ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட எட்டு மாதங்களில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.