Gold ETF: தங்கத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெற அருமையான Tips!!

உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் அதிகபட்ச தொழில்களில் நஷ்டமே வந்துகொண்டிருக்கும் நிலையில், தங்கம் சீராக சாதனை அளவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தங்கத்தின் விலை தற்போது 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 1, 2020, 03:25 PM IST
  • தங்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் கடந்த இரண்டு மாதங்களில் சிறந்த வருவாயைப் பெற்றுள்ளனர்.
  • தங்கத்தின் இந்த உயர்வு மேலும் நீடிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
  • தீபாவளிக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 60,000 ரூபாய் என்ற அளவை எட்டக்கூடும்.
Gold ETF: தங்கத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெற அருமையான Tips!! title=

தற்போது தங்கம் சந்தையில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் அதிகபட்ச தொழில்களில் நஷ்டமே வந்துகொண்டிருக்கும் நிலையில், தங்கம் (Gold) சீராக சாதனை அளவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தங்கத்தின் விலை (Gold Prices) தற்போது 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. தங்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் கடந்த இரண்டு மாதங்களில் சிறந்த வருவாயைப் பெற்றுள்ளனர்.

இருப்பினும், தங்கத்தின் இந்த உயர்வு மேலும் நீடிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். தீபாவளிக்குள் தங்கம் 60 ஆயிரத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, தங்கத்தில் முதலீடு செய்ய இது சிறந்த நேரம். இது சிறந்த வருமானத்தை வழங்கும் முதலீடாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.

ஆனால், தங்கத்தின் விலை கீழ் நோக்கி போகத் தொடங்கினால், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படலாம். இத்தகைய சூழ்நிலையில், தங்க ETF (Gold ETF) மூலம் மூலம் பணத்தைப் பாதுகாப்ப்பாக வைக்க முயற்சிக்க வேண்டும். Gold ETF-கள் கடந்த ஒரு வருடத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. தங்கத்தில் பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டுவதற்கான சரியான நேரமாக இது பார்க்கப்படுகிறது.

Gold ETF என்றால் என்ன?

Gold ETF (Exchange Traded Fund) என்பது தங்கத்தில் முதலீடு செய்யும் ஒரு வகை மியூச்சுவல் ஃபண்டாகும். இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் அலகுகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. Gold ETF-கள் பாசிவ் முறையில் நிர்வகிக்கப்படும் நிதிகள் ஆகும். இது ஸ்பாட் சந்தையில் ஃபிசிகல் தங்கத்திலிருந்து (Physical Gold) கிடைக்கும் வருமானத்தை ஒத்த வருமானத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Gold ETF-ளில் முதலீடு செய்வது எப்படி?

Gold ETF-களில் முதலீடு செய்ய, ஒருவர் குறைந்தபட்சம் ஒரு யூனிட்டை வாங்க வேண்டும். இந்த அலகு ஒரு கிராமாக இருக்கும். இருப்பினும், குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட் அரை கிராம் தங்கத்தின் அலகுகளையும் வழங்குகிறது. எந்தவொரு முதலீட்டாளரும் தங்கள் வர்த்தக கணக்கு மூலம் பங்குச் சந்தையிலிருந்து Gold ETF-களை வாங்கலாம். வாங்கிய பிறகு, Gold ETF-ன் அலகு முதலீட்டாளரின் Demat கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதை ஒரு வர்த்தக கணக்கு மூலமாகவும் விற்கலாம்.

ALSO READ: உங்கள் PIN-ஐ இந்த எளிய வழிகளில் மாற்றலாம், சைபர் மோசடியிலிருந்து தப்பிக்கலாம்!!

எத்தனை Gold ETF-கள் உள்ளன?

Gold ETF-களில் முதலீடு செய்வதால் பல நன்மைகள் உள்ளன. ஏனெனில், Gold ETF-கள் முதலீட்டாளரின் கணக்கில் ஒரு யூனிட்டாக பதிவு செய்யப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், முதலீட்டாளருக்கு ஃபிசிகல் தங்கத்துடன் தொடர்புடைய எந்தவொரு பிரச்சினையும் இருக்காது. Gold ETF-ல் அரை கிராம் யூனிட்டும் கிடைக்கிறது. எனவே குறைந்த மூலதனம் உள்ளவர்களும் இதில் முதலீடு செய்யலாம். 2007 ஆம் ஆண்டில், பெஞ்ச்மார்க் எம்.எஃப் இந்தியாவில் முதல் Gold ETF-ஐ அறிமுகப்படுத்தியது. தற்போது முதலீடு செய்ய 13 Gold ETF-கள் கிடைக்கின்றன.

தீபாவளிக்குள் தங்கம் விலை இன்னும் அதிகரிக்குமா?

ஏஞ்சல் ப்ரோக்கிங் கமாடிட்டி மற்றும் நாணய வர்த்தகத்தின் துணைத் தலைவர் அனுஜ் குப்தா, தீபாவளிக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 60,000 ரூபாய் என்ற அளவை எட்டக்கூடும் என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தீபாவளிக்குள் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் நிலையில், தங்கத்தின் விலையும் 10 கிராமுக்கு 65,000 ரூபாய் வரை உயரக்கூடும் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். தீபாவளிக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .60,000-65,000 ஆக இருக்கும் என்று கமாடிட்டி வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தங்கம் வாங்கும் உத்திகள் என்ன?

தற்போதைய நிலைகளில் இருந்து, தங்கத்தை சிறிது சிறிதாக வாங்கி சேமிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு யூனிட் தங்க Gold ETF-ஐ வாங்கலாம். தற்போது, ​​ஒரு யூனிட் Gold ETF, 4400-4660 ரூபாய்க்கு கிடைக்கிறது. அரை கிராமுக்கான யூனிட்டை வாங்க விரும்பினால், அதையும் வாங்கலாம். ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு யூனிட்டை வாங்கி இதை நீங்கள் தொடங்கலாம். ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தங்கத்தை வாங்கும் இந்த செயலுத்தியின் மூலம், தங்கத்தை நீங்கள் சிறிது சிறிதாக சேமிப்பதோடு எதிர்காலத்திற்கான ஒரு மிகச்சிறந்த முதலீடாகவும் இது இருக்கும். 

ALSO READ: உங்கள் PAN Card Fake-கா, Original-லா? வீட்டிலிருந்தபடியே இந்த வழியில் தெரிந்துகொள்ளலாம்!!

Trending News