வரலாறு காணாத விலையில் தகதகக்கும் தங்கம்! வெற்றி விழா காணும் வெள்ளி!!
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) தங்கத்தின் விலை இன்று 10 கிராமுக்கு 50,085 ரூபாய் என்ற வரலாறு காணாத விலையை எட்டியது. காலை வர்த்தகத்தில், வெள்ளியும் 61,000 ரூபாய் என்ற அளவைத் தாண்டி, கிலோவுக்கு 61,280 ரூபாய் என்ற விலையை எட்டியது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) தங்கத்தின் விலை இன்று 10 கிராமுக்கு 50,085 ரூபாய் என்ற வரலாறு காணாத விலையை எட்டியது. காலை வர்த்தகத்தில், வெள்ளியும் 61,000 ரூபாய் என்ற அளவைத் தாண்டி, கிலோவுக்கு 61,280 ரூபாய் என்ற விலையை எட்டியது. கமாடிடி வல்லுநர்களின் கூற்றுப்படி, உலகளாவிய முதலீட்டாளர்களால் ஒருதலைப்பட்சமாக தங்கமும் வெள்ளியும் வாங்கப்படுவதே, இந்த ஏற்றத்திற்குக் காரணமாகும். டாலர் வருமானம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகிவிட்ட நிலையிலும், COVID-19-ன் பிடியில் மற்ற முதலீடுகள் சிக்கியுள்ள நிலையிலும் தங்கத்தின் மவுசு கூடிக்கொண்டிருக்கின்றது.
இந்த ஏறுமுகம் தற்போதைக்கு தடைபட வாய்ப்பில்லை என்றே பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். விரைவில், தங்கம் 10 கிராம் 55,000 ரூபாய் என்ற அளவையும் வெள்ளி கிலோவிற்கு 70,000 ரூபாய் என்ற அளவையும் எட்டும் என்பது அவர்களது கணிப்பாக உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வுக்கான காரணம் குறித்து பேசிய இந்தியா புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷனின் (IBJA) தேசியத் தலைவர் பிருத்விராஜ் கோத்தாரி, “அமெரிக்க டாலர் பலவீனமாகிவிட்டது. டாலருக்கான மதிப்பு கிட்டத்தட்ட பூஜ்யமாகிவிட்ட நிலையில், அமெரிக்க சந்தைகளில் தங்கம் சுமார் 10 சதவிகித வருவாயை அளித்துள்ளது. COVID-19 காரணமாக மற்ற முதலீடுகள் வீழ்ந்துவிட்ட நிலையில் தங்கமும் வெள்ளியும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பான புகலிடங்களாகிவிட்டன.” என்று கூறினார். இந்த அனைத்து காரணிகளின் காரணத்தால், உலகளவில் தங்கம் மற்றும் வெள்ளி இரண்டையும் ஒருதலைப்பட்சமாக வாங்குவது நடைபெற்று வருகிறது என கோத்தாரி தெரிவித்தார்.
ALSO READ: உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது? என்பதை நொடியில் அறிய..
"அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 55,000 ரூபாய் என்ற நிலையை எட்டும். வெள்ளி விலை 10 கிராமுக்கு 70,000 ரூபாய் வரை உயரக்கூடும்” என்றும் கோத்தாரி கூறினார்.
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையை எடுத்துரைத்து, ஏஞ்சல் புரோக்கிங்கின் நாணய மற்றும் பொருட்கள் ஆராய்ச்சி துணை துணைத் தலைவர் அனுஜ் குப்தா கூறுகையில், "சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை 1,820 டாலர் முதல் 1,880 டாலர் வரை வர்த்தகம் செய்யப்படுகிறது. இவை தாண்டப்பட்டால், தங்கம் அவுன்ஸ் 1,920 டாலர் என்ற நிலையைக் கூட எட்டக்கூடும். வெள்ளியில், சர்வதேச விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 22.5 டாலர்களைத் தொட்டது. இது அவுன்ஸ் ஒன்றுக்கு 26 டாலர் என்ற அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. " என்று தெரிவித்தார். நடப்பு காலாண்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்றம் தொடரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
ALSO READ: ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் உச்சத்தை தொட்ட வெள்ளியின் விலை.. ஒரு கிலோ ரூ 54000