சரசரவென குறையும் தங்கம் விலை.... மேலும் குறையுமா... நிபுணர்கள் கூறுவது என்ன
Gold Rate Today: அண்மைக்காலமாக, தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை நெருங்கி, சாமானிய மக்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில், தங்கம் விலை தற்போது சரிவை சந்தித்து வருகிறது.
Gold Rate Today: நவம்பர் மாதம் பிறந்தயது முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 என்ற அளவில் மேலும் குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று (நவம்பர் 14ஆம் தேதி நிலவரப்படி) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.110 என்ற அளவில் குறைந்து, ரூ.6935 என்ற அளவிலும், சவரன் ஒன்றுக்கு ரூ.880 குறைந்து ரூ. 55,480 என்ற அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை
அண்மைக்காலமாக, உலகில் போர் நடந்து வரும் நிலையில், தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை நெருங்கி, சாமானிய மக்களுக்கு ஷாக் கொடுத்தது. தங்கம் விலை, கடந்த மாதத்தின் இறுதியில், தீபாவளிக்கு முந்தைய நாளில், வரலாற்றிலேயே புதிய உச்சத்தைத் தொட்டு சவரன் ரூ.59,520 என்ற அளவில் விற்பனையானது. அதோடு, இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ 1 லட்சத்தை தாண்டும் என நிபுணர்கள் கூறினர். ஆனால், தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது,
தங்கம் விலை குறைந்து வருவதற்கான காரணங்கள் (Reason For Fall in Gold Price)
தங்கத்தின் விலை, ரூபாய் மதிப்பு போன்றவை அமெரிக்க டாலர், பங்குச்சந்தையோடு தொடர்புடைய நிலையில், அமெரிக்க டாலர் குறியீடு, கிரிப்டோகரன்சி மதிப்பு அதிகரித்து வரும் நிலை மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளின் ஏற்றம், அதிகரிக்கும் பணவீக்கம் போன்ற காரணங்களால் தங்கம் விலை குறைந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
வருங்காலத்தில் தங்கள் விலை குறையுமா (Will God Price Reduce Further)
தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில், விலை மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், இப்போதைக்கு தங்கம் விலை சரிவை சந்தித்தாலும், எதிர்காலத்தில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஆட்சிக்கு வரும் போது ஏற்படுத்தும் கொள்கை மாற்றங்களைப் பொறுத்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.பொதுவாக, தங்கம் எந்த காலத்திலும், நஷ்டத்தை கொடுக்காது என்பது தான் பொருளாதார நிபுணர்கள் கூறும் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்க | Mutual Fund: மாதம் ரூ.5000 போதும்... கோடீஸ்வர கனவை நிறைவேற்றும் SIP முதலீடு
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.2 என்ற அளவில் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.99 என்ற அளவிலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000 என்ற விலையும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கம் கவுரவம் அளிக்கும் பொருளாக கருதப்படுகிறது. தங்கம் நமது வளமான வாழ்க்கையை எடுத்துக் காட்டுவதோடு, குழந்தை பிறப்பது முதல், திருமணம், சீமந்தம், 60வது கல்யாணம் என அனைத்து முக்கிய தருணங்களிலும் தங்க நகைகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு. மேலும் தங்கம் ஒரு நல்ல முதலீட்டுத் தேர்வாகும்.
மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு: யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ