ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு: யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம் இதோ

Central Government Pensioners Pension Hike: சூப்பர் சீனியர் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. சமீபத்தில் அவர்களது ஓய்வூதியத்தில் அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Central Government Pensioners Pension Hike: பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் ஓய்வூதிய உயர்வு குறித்து சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதில், மத்திய அரசு, இந்த ஓய்வூதியதாரர்களுக்கு கருணை உதவித்தொகை என்ற பெயரில் கூடுதல் ஓய்வூதியம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 /9

சூப்பர் சீனியர் சிட்டிசன்கள், அதாவது, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இனி மத்திய அரசு 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தின் பலனை வழங்கும்.

2 /9

பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் இது குறித்து சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதில், மத்திய அரசு, இந்த ஓய்வூதியதாரர்களுக்கு கருணை உதவித்தொகை என்ற பெயரில் கூடுதல் ஓய்வூதியம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 /9

வயது வாரியாக சூப்பர் சீனியர் சிடிசன்களுக்கு கிடைக்கும் கூடுதல் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

4 /9

80 முதல் 85 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 20% உயர்வு கிடைக்கும். 85 முதல் 90 வயது வரையிலான ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 30% உயர்வு இருக்கும்.

5 /9

90 முதல் 95 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 40% உயர்வு கிடைக்கும். 95 முதல் 100 வயதுடையவர்கள் 50% அதிகரிப்பை பெற தகுதியுடையவர்கள்.

6 /9

100 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அடிப்படை ஓய்வூதியத்தில் 100 சதவீதம் பெற தகுதியுடையவர்கள்.

7 /9

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஆகஸ்ட் 20, 1942 இல் பிறந்த ஓய்வூதியதாரர்கள், 1 ஆகஸ்ட் 2022 முதல் அடிப்படை ஓய்வூதியத்தின் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள். ஆகஸ்ட் 1, 1942 இல் பிறந்த ஓய்வூதியம் பெறுபவர்களும் ஆகஸ்ட் 1, 2022 முதல் அடிப்படை ஓய்வூதியத்தின் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள்.

8 /9

ஓய்வூதியம் பெறுவோர் நிர்ணயிக்கப்பட்ட வயதை எட்டிய முதல் நாள் முதல் கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணை உதவித்தொகை அமலுக்கு வரும் என ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ஓய்வூதிய கொடுப்பனவுகள் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வயது அதிகரிக்கும் போது அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளை நிர்வகிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

9 /9

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறைகள் மற்றும் வங்கிகள் புதிய ஓய்வூதிய வழிகாட்டுதல்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களும் எந்தவித தாமதமுமின்றி சரியான பலன்களைப் பெறுவது உறுதி செய்யப்படும்.