அட்சய திருதியை அன்று அசால்டாய் ஏறிய தங்கம், வெள்ளி விலை: 10 கிராம் விலை எவ்வளவு?
கொரோனா காலத்துக்கு ஏற்ப மக்கள் ஆன்லைனில் அக்ஷய திரிதியை கொண்டாடியுள்ளார்கள் என்பதை தங்க விலை உயர்விலிருந்து கணிக்க முடிகிறது. ஆன்லைனில் சிலர் தங்கத்தை ஆர்டர் செய்ய, சிலரோ ஈ-தங்கத்தை வாங்கி சேர்த்தனர். முன்கூட்டிய ஆர்டர்கள் பல குவிந்ததாக நகை கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
புது தில்லி: வெள்ளிக்கிழமை, தங்கம் மற்றும் வெள்ளி விலை கடுமையான ஏற்றத்தைக் கண்டது. எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீசின் படி, தேசிய தலைநகரில் வாரத்தின் கடைசி வர்த்தக அமர்வான இன்று தங்கம் 10 கிராமுக்கு ரூ .146 அதிகரித்து ரூ .47,110 ஆக விற்பனை செய்யப்பட்டது. முந்தைய அமர்வில், டெல்லியில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 46,964 ரூபாயாக இருந்தது. எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீசின் படி, உலகளவில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மீட்சியின் காரணமாக இந்தியாவிலும் 10 கிராம் தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டது.
கொரோனா காலத்துக்கு ஏற்ப மக்கள் ஆன்லைனில் அட்சய திரிதியை (Akshaya Tritiya) கொண்டாடியுள்ளார்கள் என்பதை தங்க விலை உயர்விலிருந்து கணிக்க முடிகிறது. ஆன்லைனில் சிலர் தங்கத்தை ஆர்டர் செய்ய, சிலரோ ஈ-தங்கத்தை வாங்கி சேர்த்தனர். முன்கூட்டிய ஆர்டர்கள் பல குவிந்ததாக நகை கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
சென்னையிலும் இன்று தங்கத்தின் விலை உயர்வைக் கண்டது. பொதுவாக அட்சய திரிதியை தினத்தன்று தங்கம் வாங்குவது நல்லதாகப் பார்க்கபப்டுகின்றது. ஆகையால் இந்த நாளில் பொதுவாக தங்கத்தின் விலை வானை தொடுவது வழக்கம். சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் அட்சய திரிதியை மீதும் கொரோனா (Coronavirus) சாயல் பட்டுவிட்டதால், வழக்கமான விதத்தில் தங்கத்தின் விலையில் ஏற்றத்தைக் காண முடியவில்லை. எனினும், குறிப்பிடத்தக்க உயர்வு தங்கம், வெள்ளி விலையில் காணக்கிடைத்தது.
ALSO READ: அட்சய திருதியை: ஆன்லைனில் தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன
வெள்ளி விலையும் உயர்ந்தது
டெல்லியில் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ .513 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ .69,678 ஐ எட்டியது. முந்தைய அமர்வில், வெள்ளி விலை கிலோவுக்கு 69,678 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீசின் மூத்த ஆய்வாளர் தபன் படேல் கூறுகையில், "நியூயார்க்கை தளமாகக் கொண்ட கமாடிடி எக்ஸ்சேஞ்சான காமெக்ஸில் தங்கத்தின் (Gold) விலை மீட்சியைக் கண்டுள்ளது. டெல்லியில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .146 அதிகரித்துள்ளது." என்றார்.
இந்தியாவில் அட்சய திரிதியை தினத்தின் காரணத்தாலும் தங்கத்தின் விலையில் ஒரு ஏற்றம் காணப்பட்டதாக படேல் கூறினார். இந்த நாளில் தங்கம் வாங்குவது நல்லதாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை
சர்வதேச அளவில், தங்கம் ஒரு அவுன்ஸ் 1,834 டாலராக இருந்தது. உலகளவில், வெள்ளி அவுன்ஸ் 27.20 டாலராக இருந்தது.
டாலரின் பலவீனம் காரணமாக இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, தங்கத்தின் விலையில் ஏற்பட்டு வந்த சரிவு முடிவுக்கு வந்தது என்று அவர் கூறினார்.
ALSO READ: அட்சய திருதியை நாளின் முக்கியத்துவம் என்ன தெரியுமா
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR