அட்சய என்பது வளர்க என்று பொருள். அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. இன்று அட்சயதிருதியை நாள் கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் நாம் வாங்கும் பொருட்கள் மேன்மேலும் வளரும். அன்றைய தினம் கல் உப்பு, மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும். நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும். சுக்கிரன் ஆசி நிறைந்த வெள்ளிக்கிழமை அட்சய திருதியை வருவது சிறப்பானதாகும்.
சித்திரை மாத வரும் அமாவாசைக்கு பிறகு 3வது நாள் திருதியை 3ஆம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை (Akshaya Tritiya) நாளில் பொன் வாங்குவது சிறப்பு.
ALSO READ| அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை.
மக்களை அனைவரும் அதிகளவில் நம்பும் இந்த உவந்த நாளில் தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரம் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வகையில் அட்சய திருதியை நாளான இன்று தங்கம் வாங்க நல்ல நேரம் எது என்று பார்போம்.
சென்னை | அதிகாலை 5.44 - இரவு 12.05 |
புதுடெல்லி | அதிகாலை 6.04 - இரவு 12.35 மணி |
மும்பை | அதிகாலை 6.04 - இரவு 12.35 மணி |
அகமதாபாத் | அதிகாலை 5.59 - இரவு 12.36 மணி |
பெங்களூரு | அதிகாலை 5.55 - இரவு 12.16 மணி |
ஹைதராபாத் | அதிகாலை 5.44 - இரவு 12.12 மணி |
கொல்கத்தா | அதிகாலை 4.56 - மே 15 காலை 7.59 |
ஜெய்ப்பூர் | அதிகாலை 05.40 மணி -இரவு 12.23 மணி |
அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு அட்சய திருதியை நாளில் செய்யப்படுகிறது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR