அரண்மனையில் வாழும் அனுபவத்தைத் தரும் டிரெயின்! ஆனா டிக்கெட் விலையும் கொஞ்சநஞ்சமில்ல
Golden Chariot Train: 5 நட்சத்திர ஹோட்டல் போன்ற வசதிகளைக் கொடுக்கும் இந்தியாவின் மிக ஆடம்பரமான ரயில்... ஆடம்பரமான உணவகம்-ஜிம் மற்றும் ஸ்பா வசதிகள் கொண்ட சொகுசு ரயில்
புதுடெல்லி: இந்தியாவின் மிக சொகுசு ரயிலில் பயணம் செய்திருக்கிறீர்களா? ராஜ வாழ்க்கை என்பதை சில நாட்கள் அனுபவித்துப் பார்க்க வேண்டுமானால் இந்த ரயிலில் பயணிக்கலாம். இந்தியாவின் மிக ஆடம்பரமான ரயிலில், ஆடம்பரமான உணவகம்-ஜிம் மற்றும் ஸ்பா வசதிகளும் உள்ளது.
இந்தியன் ரயில்வே
இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். இந்த நெட்வொர்க் மூலம் தினமும் சுமார் 4 கோடி பேர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்கின்றனர். ரயிலில் பயணம் செய்வது மலிவானது மட்டுமல்ல, மக்களுக்கு வசதியானது. இது வழக்கமான இந்திய ரயிலின் பார்வை என்றால், இந்திய இரயில்வேயின் மிகவும் ஆடம்பரமான ரயில் பற்றியும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் வசதி கொண்ட ரயில்
பயணிகளுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற வசதிகளைக் கொடுக்கும் இந்தியாவின் மிக ஆடம்பரமான ரயில் இது. அற்புதமான உணவகம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, டான்ஸ், பார் போன்ற அனைத்து வசதிகளும் கொண்ட இந்த ரயிலில் பயணிக்க, மற்ற ரயில்களை விட பல மடங்கு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனாலும், இந்த ரயிலில் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் தான்.
மேலும் படிக்க | ஜாக்பாட் செய்தி: வருகிறது 'வந்தே சாதாரண்' ரயில்.. குறைந்த கட்டணம், அதிக வசதிகள்
கோல்டன் சாரட் ரயில்
கோல்டன் சாரட் ரயில் பயணம் உங்களை தென்னிந்தியாவின் அழகான இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே மிக அழகான ரயில்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. ரயில் பாதையில் ஊர்ந்து செல்லும் ஒரு அரண்மனை என்றும் இந்த ரயிலை அழைக்கலாம். ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ரயிலில் பல வசதிகள் உள்ளன.
இந்த ரயிலில் உள்ள சிற்பங்கள் ஹோசல்யா கோயில், ஹலேபிட் கோயில் மற்றும் ஹம்பி போன்ற சிற்பங்களை ஒத்திருக்கிறது. இந்த ரயிலில் ஆடம்பரமான படுக்கைகள், நாற்காலிகள் மற்றும் உணவுக் கூடம் போன்ற வசதிகள் உள்ளன. இந்த சொகுசு ரயிலில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் கிடைக்கும். இந்த ரயிலில் உடற்பயிற்சி செய்யும் கூடமும் உள்ளது.
மேலும் படிக்க | இனி சென்னை - பெங்களூரு சீக்கிரமே போகலாம்... செம வேகத்தில் இனி ரயில்கள் பறக்கும்!
மலைக்க வைக்கும் வசதிகள்
கோல்டன் சாரட் ரயில் பயணத்தில் பார் வசதியையும் அனுபவிக்கலாம். இந்த மதுவகத்தில் பல்வேறு வகையான மதுபானங்கள் மற்றும் காக்டெய்ல் விருந்துகளை அனுபவிக்க முடியும். ரயிலின் ஒவ்வொரு கேபினிலும் டிவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தவிர, கூட்டம் நடத்தவும் அறை வசதியும் உள்ளது. இதுமட்டுமின்றி, இந்த சொகுசு ரயிலில் ஸ்பா வசதியும் உள்ளது, ஆயுர்வேத மசாஜ் செய்து களைப்பை போக்கலாம்.
கோல்டன் சாரட் ரயில் கட்டணம்
இந்த ரயிலில் பயணிக்க கட்டணம் (Golden Chariot Train Fare) எவ்வளவு என்று தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறதா? இதில் ரயிலுக்கு வழக்கமான டிக்கெட் முன்பதிவு எதுவும் கிடையாது. இதில் ஒரு பேக்கேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட்டுகள், உணவு மற்றும் பானங்கள், போக்குவரத்து மற்றும் செல்லும் இடங்களில் தங்கும் வசதி ஆகியவை கொண்ட பேக்கேஜ் கட்டணமும் கொஞ்சம் ஆடம்பரமானது தான்.
தங்கத் தேர் என்று தமிழில் பொருள் தரும் கோல்டன் சாரட் ரயிலின் டீலக்ஸ் கேபினில் 5 இரவுகள் மற்றும் 6 நாட்கள் கொண்ட பேக்கேஜ் உள்ளது. இந்த கேபினில் ஒருவர் தனியாக பயணம் செய்தால் சுமார் ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் செலுத்த வேண்டியுள்ளது. அந்த கேபினில் இருவர் பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.3 லட்சத்து 98 ஆயிரம் ஆகும்.
மேலும் படிக்க | ரயில் ஏசி இருக்கை டிக்கெட் கட்டண குறைப்பு! ஆனால் சில நிபந்தனைகள் உண்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ