Airtel வாடிக்கையாளர்களுக்கு good news: 100% இலவசமான Airtel Safe Pay அறிமுகம்
‘Airtel Safe Pay’-வை பயன்படுத்தி, ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மில்லியன் கணக்கான வணிகர்கள், ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றில் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டணங்களை செலுத்துவதோடு பாதுகாப்பாக பணத்தையும் அனுப்பலாம்.
Online Payment Fraud: ஆன்லைன் கட்டண மோசடி சம்பவங்களில் இருந்து ஏர்டெல் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க, ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி இன்று ‘Airtel Safe Pay’ என்ற டிஜிட்டல் கட்டணம் செலுத்துவதற்கான இந்தியாவின் பாதுகாப்பான பயன்முறையை அறிமுகப்படுத்தியது.
‘Airtel Safe Pay’ மூலம், UPI அல்லது நெட்பேங்கிங் அடிப்படையிலான கட்டணங்களை Airtel பேமண்ட்ஸ் வங்கி மூலம் செலுத்தும் Airtel வாடிக்கையாளர்கள், இனி அவர்களது வெளிப்படையான அனுமதியின்றி தங்கள் கணக்குகளை விட்டு பணம் வெளியேறுவது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.
Airtel Safe Pay முற்றிலும் இலவசமானது. Airtel Thanks App-ன் முகப்புத் திரை மூலமாகவோ அல்லது பேங்கிங் செக்ஷனிலிருந்தோ இதை ஆக்டிவேட் செய்யலாம்.
இந்த அம்சத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய, ஏர்டெல் (Airtel) பேமண்ட்ஸ் பேங்கின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அனுப்ரதா பிஸ்வாஸ், “டிஜிட்டல் முறை கட்டணங்கள், குறிப்பாக தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில் வழக்கமாகிவிட்டதால், வேகமாக வளர்ந்து வரும் மோசடிகளின் சவாலுக்கும் நாம் தீர்வு காண வேண்டும். நாங்கள் அறிமுகப்படுத்தும் இந்த தனித்துவமான அம்சம், எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளில் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய முடியும். இதை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது பாதுகாப்பு அளவை அதிகரித்து, இந்திய டிஜிட்டல் கட்டண தளத்தில் ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது” என்று கூறினார்.
ALSO READ: Airtel, Jio அறிமுகம் செய்யும் Li-Fi Connection: Wi-Fi-ஐ விட 20% அதிக வேகம்!!
பாரதி ஏர்டெல்லின் (Bharti Airtel) தலைமை தயாரிப்பு அதிகாரி ஆதர்ஷ் நாயர் கூறுகையில், “Airtel Safe Pay எங்களது அடுத்த புதுமையான முன்முயற்சியாகும். இதில், எங்கள் பாதுகாப்பான இணைப்புகளும் உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் தளங்களும் இணைந்து ஒரு தனித்துவமான சந்தை சிக்கலைத் தீர்க்கின்றன.
Airtel-லில், எங்கள் பயனர்களுக்கு மிகவும் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டண தளங்களை வழங்குவதிலும், மோசடி பரிவர்த்தனைகள் குறித்து கவலைப்படாமல் வாடிக்கையாளர் எப்போதும் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதிலும் நாங்கள் முன்னிலை வகிக்கிறோம்” என்று கூறினார்.
‘Airtel Safe Pay’-வை பயன்படுத்தி, ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மில்லியன் கணக்கான வணிகர்கள், ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றில் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டணங்களை (Digital Payments) செலுத்துவதோடு பாதுகாப்பாக பணத்தையும் அனுப்பலாம்.
சில நிமிடங்களிலேயே வாடிக்கையாளர்கள் Airtel Payments Bank கணக்கை திறக்கலாம். Airtel Thanks App மூலம் ஒரு வீடியோ கால் செய்து கணக்கை திறக்க முடியும். அதன் பின்னர், அவர்கள் பாதுகாப்பான முறையில் டிஜிட்டல் கட்டணங்களை செலுத்திக்கொண்டே பல நன்மைகளையும் அனுபவிக்கலாம்.
ALSO READ: WhatsApp புதிய தனியுரிமை கொள்கையை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR