வட்டி விகிதங்கள் அதிகரிப்பு: புத்தாண்டை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பம்பர் செய்தியை கொடுத்துள்ளது எஸ்பிஐ ! நீண்டகால வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள பாரத ஸ்டேட் வங்கி, அதனை இன்று முதலே அமல்படுத்திவிட்டது. இரண்டு கோடி ரூபாய்க்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கு வட்டிகள் அதிகரித்துள்ளன. உள்நாட்டு கால வைப்புகளுக்கான வட்டி விகிதங்களில் (Retail Domestic Term Deposits) திருத்தம் செய்வதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) 2024 புத்தாண்டுக்கு முன்னதாக வங்கியின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. 


SBI இன் FD வட்டி அதிகரிப்பு இன்று (புதன்கிழமை 27 டிசம்பர் 2023) முதல் அமலுக்கு வந்துவிட்டது. இது தொடர்பான அறிவிப்பை எஸ்பிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


மேலு படிக்க | Budget 2024: PPF முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட்டில் இரட்டை ஜாக்பாட், அதிகரிக்கும் வருமானம்


சில்லறை உள்நாட்டு கால டெபாசிட்டுகள் (ரூ. 2 கோடிக்கும் குறைவான) வட்டி விகிதங்களில் திருத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.



27.12.2023 முதல் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்:


மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம்
மூத்த குடிமக்களுக்கான FD விகிதங்கள் 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான தவணைக்காலம், ”SBI We-care” டெபாசிட் திட்டத்தின் கீழ் 50 bps கூடுதல் பிரீமியத்தை உள்ளடக்கியது.


அம்ரித் கலாஷ் நீண்டகால வைப்புத் திட்டம்


7.10% வட்டி விகிதத்தில் "400 நாட்கள்" (அம்ரித் கலாஷ்) என்ற குறிப்பிட்ட தவணைக்கால திட்டம். 12- ஏப்ரல்- 2023. மூத்த குடிமக்கள் 7.60% வட்டி விகிதத்திற்கு தகுதியுடையவர்கள். இந்தத் திட்டம் 31-மார்ச்-2024 வரை செல்லுபடியாகும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.


ரிசர்வ் வங்கியின் இருமாத நாணயக் கொள்கை அறிவிப்பு வெளியான சில வாரங்களுக்குப் பிறகு எஸ்பிஐயின் எஃப்டி விகிதத் திருத்தம் வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதங்களை மாற்றாமல் வைத்துள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டத்தின் முடிவை அறிவித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ விகிதங்களை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்திருக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


மேலும் படிக்க | நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது! ரிசர்வ் வங்கியின் குட் நியூஸ்


இதனால், பல வித கடன்களை வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு கடன் EMI யில் எந்த மாற்றமும் இருக்காது,வட்டி விகிதங்களில் அதிரிப்பு இருக்காது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதங்கள் பழைய நிலையிலேயே தொடரும் அறிவிப்பைத் தொடர்ந்து,  கோடக் மஹிந்திரா வங்கி FD மீதான வட்டி விகிதத்தை மீண்டும் அதிகரித்தது.  


அதன்படி கோடக் மஹிந்திரா தற்போது 2.75 சதவீதம் முதல் 6.20 சதவீதம் வரை வட்டியை வழங்குகிறது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FDக்களுக்கு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. கோடக் வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen Investment) 7.75 சதவீதமும் வட்டி அளிக்கிறது.


இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் பாரத ஸ்டேட் வங்கியும் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ள நிலையில், வேறு சில வங்கிகளும் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.


மேலும் படிக்க | NPS பங்களிப்பை செலுத்த மறந்தால் என்ன நடக்கும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ