Automatic Transfer Of EPF Accounts: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அதன் உறுப்பினர்களுக்கு ஒரு மிக நல்ல வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பிஎஃப் உறுப்பினர்களுக்கு மிக உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இனி ஊழியர்கள் தங்கள் வேலையை மாற்றும்போது இபிஎஃப் கணக்குகள் தானாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். எனினும் இந்த அம்சம் பற்றி இன்னும் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு அதிகம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Automatic Transfer Process என்றால் என்ன?


தானியங்கு பரிமாற்ற அம்சமானது, தற்போதுள்ள இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members), தங்கள் வேலைகளை மாற்றும்போது, எந்த வித ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் செயல்முறைகளும் இல்லாமல், தங்களது பிஎஃப் இருப்புத் தொகையை (PF Balance) பழைய நிறுவனத்திடமிருந்து புதிய நிறுவனத்திற்கு தடையின்றி மாற்றுவதற்கு உதவுகிறது. இதன் பொருள் என்னவென்றால், இபிஎஃப் கணக்கு பரிமாற்றம் (EPF Account Transfer) தானாகவே நடக்கும். இது உறுப்பினர்களின் சிரமத்தை பெருமளவில் நீக்கியுள்ளது. 


Automatic Transfer Process: இந்த வசதியை யார் பெற முடியும்?


இந்த புதிய செயல்முறை அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், யாருடைய பழைய மற்றும் புதிய EPF கணக்குகள் EPFO ஆல் பராமரிக்கப்படுகின்றனவோ, அந்த EPF உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். விலக்கு அளிக்கப்பட்ட பிஎஃப் அறக்கட்டளைகள் (PF Trusts) இந்த தானியங்கி பரிமாற்ற திட்டத்தின் கீழ் வராது.


மேலும் படிக்க | வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி


Automatic Transfer Process: இதை ஆக்டிவேட் செய்வதற்கான தேவைகள் என்ன?


ஆடோமேடிக் EPF கணக்கு பரிமாற்றங்களை எளிதாக்க, உறுப்பினர்கள் EPFO ஆல் குறிப்பிட்ட சில தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். 


- புதிய நிறுவனம் / முதலாளி வழங்கிய UAN மற்றும் ஆதார் எண்கள் UAN இடம் இருக்கும் விவரங்களுடன் பொருந்த வேண்டும்.


- EPF உறுப்பினரின் ஆதார் எண் இணைக்கப்பட்டு, முந்தைய பணியிடத்தில் UAN உடன் சரிபார்க்கப்பட வேண்டும்.


- சேரும் தேதி, வெளியேறிய தேதி மற்றும் வெளியேறுவதற்கான காரணம் போன்ற விவரங்கள் பழைய நிறுவனம் / முதலாளியிடம் இருந்து கிடைக்க வேண்டும்.


- EPF உறுப்பினரின் UAN செயல்படுத்தப்பட வேண்டும், அதாவது ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.


- மேலும் உறுப்பினரின் மொபைல் எண் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்.


தொகையை மாற்றும்போது இனி பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை 


ஒரு ஊழியர் வேலையை மாற்றும் போது, ​​அவரது UAN இல் புதிய நிறுவனம் சேர்க்கப்படுகின்றது. முன்னர் அவர் ஆன்லைனில், EPFO ​​இணையதளத்திற்குச் சென்று பழைய பிஎஃப் கணக்கை (PF Account) புதிய கணக்குடன் இணைக்க வேண்டும். இந்தச் செயல்பாட்டில், EPFO உறுப்பினர்கள் அடிக்கடி பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதில் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இது தவிர இதில் ஊழியர்களின் பழைய மற்றும் புதிய நிறுவனங்களும் இதற்கான சில செயல்முறைகளை செய்ய வேண்டி இருந்தது. இப்போது புதிய விதியின் கீழ், இந்த செயல்பாட்டில் உறுப்பினருக்கு எந்தப் பங்கும் இருக்காது.


மேலும் படிக்க | National Savings Scheme: தபால் அலுவலகத்தின் அட்டகாசமான திட்டம்... அசத்தல் வட்டி, வரி விலக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ