Indian Bank Doorstep Banking: கொரோனா தொற்றுநோய்க்கு பிறகு, உலகெங்கிலும் உள்ள அனைத்து துறையும் பாதிக்கப்பட்டன, தற்போது இந்த பாதிப்பு சற்று குறைந்து மீண்டும் இயல்பு நிலையிக்கு திரும்பத் தொடங்கியது. கொரோனா காலத்தில், வங்கி வேலைகளும் முற்றிலும் முடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்குக்கு மத்தியில், வங்கி வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது ஒரு நல்ல செய்தியை வெளியிட்டு உள்ளது. வாடிக்கையாளர்களிடன் பணம் இல்லையென்றாலோ, அல்லது பணம் எடுக்கவேண்டும் என்றாலோ, அல்லது பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றாலோ அவர்கள் வங்கி கிளையையோ அல்லது ஏடிஎம் (ATM) மையத்தையோ நாடி செல்ல வேண்டியதில்லை. வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வீட்டு வாசலில் பணம் வழங்கும் சேவையை வழங்கி வருகிறது.


ALSO READ: கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வர்த்தகத்தை மேம்படுத்த PNB வழங்கும் அற்புத வாய்ப்பு..!!


இந்நிலையில் தற்போது இந்தியன் வங்கி வீட்டு வாசலில் (Doorstep Banking) பணம் வழங்கும் சேவையை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இது தொடர்பாக இந்தியன் வங்கி (Indian bank) சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கைப்பிடியில் தெரிவித்து இருந்தது.  அதில்,


 



 


வீட்டு வாசலில் வங்கி சேவைக்கான பதிவை வாடிக்கையாளர் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கி கிளையில் செய்ய வேண்டும். இந்த வங்கியில் கணக்கு இருந்தால், 1800 12 13 721 என்ற இலவச தொலைபேசி எண்ணையும் அழைக்கலாம். இது தவிர, நீங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.psbdsb.in ஐப் பார்வையிடலாம். இந்த வசதிக்கு நீங்கள் KYC செய்ய வேண்டும்.


இந்த வசதியின் கீழ், வங்கி தொடர்பான அனைத்து வேலைகளும் வீட்டில் இருந்த படியே செய்யலாம். இந்த கணக்கு துவக்கத்தின் கீழ், பண வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல், பணப் பரிமாற்றம், ரீசார்ஜ் மற்றும் பில் செலுத்தும் சேவைகளையும் பெறலாம்.


ALSO READ: PPF கணக்கை பஞ்சாப் நேஷனல் வங்கியில் திறந்தால் பல நன்மைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR