கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வர்த்தகத்தை மேம்படுத்த PNB வழங்கும் அற்புத வாய்ப்பு..!!

பஞ்சாப் நேஷனல் வங்கி, கொரோனா தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஹோட்டல் துறையை மீட்டெடுக்க ஒரு சிறந்த கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 6, 2021, 02:26 PM IST
  • கோவிட் காரணமாக மூடப்பட்ட வணிகத்தைத் தொடங்க சிறந்த வாய்ப்பு.
  • ரூ.10 கோடி வரை கடன் பெறலாம்.
  • பிஎன்பியின் சிறப்புத் திட்டத்தில் சலுகைகளும் கிடைக்கின்றன.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வர்த்தகத்தை மேம்படுத்த PNB வழங்கும் அற்புத வாய்ப்பு..!! title=

PNB Satkar Scheme: கொரோனா காலத்தில் பலர் வேலை இழந்தனர், பலரின் வியாபாரம் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விமானத்துறையும் ஹோட்டல் துறையும் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகள் என்றால் மிகையாகாது. பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கொரோனா தொற்றுநோயினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஹோட்டல் துறையை மேம்படுத்த ஒரு சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிஎன்பி சத்கர் திட்டத்தில், ஹோட்டல் துறையுடன் தொடர்புடைய மக்கள் தங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கும், புதுப்பிப்பதற்கும் மற்றும் விரிவுபடுத்துவதற்கும் எளிதாக கடன்களைப் பெறலாம்.

கடன் சலுகையை யார் பயன்படுத்திக் கொள்ள முடியும்?

பிஎன்பி வங்கியின் பிஎன்பி சத்கர் திட்டத்தை ஹோட்டல்கள், உணவகங்கள், லாட்ஜ்கள், விருந்தினர் மாளிகைகள், விடுதிகள், பீஸ்ஸா மையங்கள், மெஸ், கேன்டீன்கள், கேட்டரிங் சேவைகள், சர்வீஸ் அபார்மெண்ட் துறையினர், டீ கடைகள், காபி கடைகள் வைத்திருப்பவர்கள் ஆகியோர், தங்கள் கடன் தேவைகளுக்கு, வியாரத்திற்கு நிலம் வாங்குவதற்கு அல்லது வணிகத்தை மேம்படுத்த அல்லது விரிவாக்க கடன்களை பெறலாம்.

ALSO READ | Education Loan: கல்விக்கடன் எடுக்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.!

கடன் பெறுவதற்கான தகுதி 

தனிநபர், ஹோட்டல் உரிமையாளர், பார்டன்ர்ஷிப் அமைப்பு, எல்எல்பி தனியார்-பொது லிமிடெட் போன்றவை பிஎன்பியின் சத்கர் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிர, சேவைத் துறையில் ஆரம்ப முதலீடு ரூ. 5 கோடியை தாண்டதாக MSME பிரிவினரும் பலனைப் பெறலாம்.

கடன் எவ்வளவு கிடைக்கும்?

PNB சத்கர் திட்டத்தில் ரூ.10 கோடி வரை கடன் கிடைக்கும். இது தவிர, நீங்கள் ரூ .50 லட்சம் வரை ஓவர் டிராஃப்ட் வசதியையும் பெறலாம். பிஎன்பியின் இந்த சத்கர் திட்டத்தில், ஜோட்டல் துறைக்கு 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு கடன் கிடைக்கும். இதில் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு மேல் மொராடோரியம் சலுகையும் கிடைக்கும்.

PNB யின் இந்தத் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே குறைந்தபட்சம் 40 சதவிகிதம் அளவிற்கு (Collaterals Coverage) அடமானம் வைக்க வேண்டும். 

ALSO READ | Post Office Schemes: பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பர் முதலீட்டு திட்டங்கள்..!!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News