புதுடெல்லி: LIC Policy Payment through Paytm: நீங்கள் ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC-யில் பாலிசி எடுத்துள்ளீர்களா? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. இனி, LIC வாடிக்கையாளர்கள், பாலிசி பிரீமியம் அல்லது எந்தவொரு பாலிசி தொடர்பான கட்டணத்தையும் Paytm மூலம்  செலுத்த முடியும். LIC அதன் அனைத்து டிஜிட்டல் கட்டண வசதிகளையும் வழங்க Paytm ஐ நியமித்துள்ளது. பல கட்டண கேட்வேக்களுடனான ஒப்பந்த பேச்சுக்களுக்குப் பிறகு, LIC தற்போது Paytm உடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. LIC-யின் பல்வெறு கடட்ணங்கள் டிஜிட்டல் பயன்முறையில் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Paytm-LIC இடையில் டிஜிட்டல் கட்டண ஒப்பந்தம்


ஊடக செய்திகளின் படி, LIC-யின் டிஜிட்டல் கட்டண வசதிக்காக ஒப்பந்தத்தைப் பெற 17 கட்டண கேட்வேக்கள் ஏலத்தில் பங்குகொண்டன. பல கட்டண சேவைகளில், Paytm இன் வலுவான இருப்பு அதற்கு ஆதரவாக செயல்பட்டது. மீதமுள்ள கட்டண கேட்வேக்கள் UPI அல்லது கார்டுகள் போன்ற சில பிரிவுகளில் மட்டுமே சிறப்பாக இருந்தன. Paytm பல அம்சங்களில் சிறப்பான சேவையை வழங்கியது. புதிய ஒப்பந்தம் கட்டணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்கும். அதிக கட்டணம் செலுத்தும் ஆப்ஷன்கள் கிடைக்கும். கட்டண வாலட்டுகள் மற்றும் வங்கி வசதிகள் போன்ற அம்சங்களும் இதில் கிடைக்கும். 


கொரோனா காலத்தில் வேகமாகப் பரவிய டிஜிட்டல் கட்டண முறை 


அறிக்கையின்படி, கொரோனா தொற்றுநோயின் போது LIC டிஜிட்டல் கட்டணங்களில் அதிகப்படியான முன்னேற்றத்தைக் கண்டது. இந்த காலகட்டத்தில், LIC டிஜிட்டல் பயன்முறையின் மூலம் ரூ .60,000 கோடி பிரீமியத்தை வசூலித்தது. வங்கிகள் மூலம் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. இவை சுமார் 8 கோடி பரிவர்த்தனைகளாக இருக்கும் என்றும், இது மேலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


ALSO READ: LIC ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: 16% சம்பள உயர்வு, 2 நாள் week off


பிரீமியங்கள் மட்டுமல்ல, அனைத்து வகையான கட்டண செலுத்தலும் சாத்தியமாகும்.


LIC, Paytm மூலமாக பிரீமியம் கட்டணங்கள் மட்டுமல்லாமல், அனைத்து வித கட்டண வசூல்களையும் டிஜிட்டல் முறையில் பெற தயாராகியுள்ளது. இதில், காப்பீட்டு முகவர் மூலம் பணம் அனுப்புவதும் அடங்கும். LIC பாலிசி உள்ளவர்கள், முன்னரும் தங்கள் பிரீமியத்தை Paytm மூலம் செலுத்த முடிந்தது. இது தவிர, GooglePay, PhonePe மூலமும் கட்டணத்தை செலுத்தலாம். 


Paytm மூலம் LIC பிரீமியத்தை செலுத்துங்கள்


Paytm தளத்துக்கு சென்று, LIC ஐ சர்ச் செய்யவும். இங்கே நீங்கள் உங்கள் பாலிசி எண்ணை உள்ளிட வேண்டும். நீங்கள் பாலிசி எண்ணை உள்ளிட்டவுடன், பிரீமியத்தைக் காண்பீர்கள். Proceed என்பதைக் கிளிக் செய்து கட்டணத்தை செலுத்தவும்.


ALSO READ: உங்க குழந்தைக்கு இந்த பாலிசியை உடனே எடுங்க, பம்பர் பாலிசி!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR