LIC ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: 16% சம்பள உயர்வு, 2 நாள் week off

LIC ஊழியர்களுக்கு அரசாங்கம் 16 சதவீத சம்பள உயர்வை பரிசாக வழங்கியது மட்டுமல்லாமல், வாரத்திற்கு 2 நாட்கள் வார விடுமுறை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 17, 2021, 03:33 PM IST
  • LIC ஊழியர்களுக்கு இந்திய அரசு இரட்டை நற்செய்தியை வழங்கியுள்ளது.
  • LIC ஊழியர்கள் 16 சதவீத சம்பள உயர்வைப் பெறுவார்கள்.
  • வாரத்திற்கு 2 நாட்கள் வார விடுமுறை கிடைக்கும்.
LIC ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: 16% சம்பள உயர்வு, 2 நாள் week off  title=

புதுடெல்லி: ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC ஊழியர்களுக்கு இந்திய அரசு இரட்டை நற்செய்தியை வழங்கியுள்ளது. LIC ஊழியர்களுக்கு அரசாங்கம் 16 சதவீத சம்பள உயர்வை பரிசாக வழங்கியது மட்டுமல்லாமல், வாரத்திற்கு 2 நாட்கள் வார விடுமுறை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதாவது, நாடு முழுவதும் LIC ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டியிருக்கும். தகவல்களின்படி, நிதிச் சேவைத் துறை (DFS) இதற்கு அதன் ஒப்புதலை வழங்கியுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதன் பலனைப் பெறுவார்கள்.

9 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பள உயர்வு 

LIC ஊழியர்களின் சம்பளம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்களது சம்பளம் கடைசியாக ஆகஸ்ட் 2012 இல் அதிகரிக்கப்பட்டது. LIC வழக்கமாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் சம்பளத்தை அதிகரிக்கும் (Salary Hike). ஆகையால் இந்த போக்கு பலரை வியப்புக்குள்ளாக்கியது. 

இந்த முறை சம்பள அதிகரிப்பில் நீண்ட இடைவெளி இருந்ததால், ஊழியர்கள் சுமார் 35 சதவீதம் அதிகப்படியான சம்பளத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 16 சதவீத உயர்வே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: LIC பாலிசிதாரர்களுக்கு மிகப்பெரிய செய்தி: கொரோனா காலத்தில் உதவிக்கரம் நீட்டியது LIC

இருப்பினும், இதற்குப் பதிலுக்கு அவர்களுக்கு மற்றொரு நன்மை கிடைத்துள்ளது. LIC ஊழியர்கள் வாரத்திற்கு இரண்டு விடுமுறை நாட்களை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இனி LIC ஊழியர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை இருக்கும். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது. பல அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் நீண்ட காலமாக வாரத்திற்கு 5 பணி நாட்கள் என்ற முறையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அனைவருக்கும் தற்போது இந்த நன்மை கிடைத்து விட வில்லை. தற்போது, ​​பல வங்கிகளில் மாற்றும் விடுமுறைக்கான முறை செயலில் உள்ளது. 

சிறப்பு ஏற்பாடுகளும் அறிவிக்கப்பட்டன

சம்பளம், வார விடுமுறை தவிர, LIC ஊழியர்களுக்காக 'பிற சிறப்பு ஏற்பாடுகளையும்' செய்துள்ளது. இவை அனைத்து வகை ஊழியர்களுக்குமானதாக உள்ளது. இப்போது ஒவ்வொரு மாதமும், 1,500 முதல் 13,500 வரை ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) கிடைக்கும். இருப்பினும், இது தனித்தனியாக அளிக்கப்படும். தகவல்களின்படி, இது வீட்டு வாடகை கொடுப்பனவு, ஊதிய விடுப்பு என்காஷ்மென்ட், கிராஜுவிட்டி ஆகியவற்றிலிருந்து தனித்து வைக்கப்பட்டுள்ளது. 

LIC விரைவில் IPO-வை கொண்டுவரவுள்ளது. இந்திய வரலாற்றில் இது மிகப்பெரிய IPO-வாக இருக்கும் என்று கருதப்படுகின்றது. LIC இந்த IPO-வுக்கான ஏற்பாடுகளை நீண்ட காலமாக செய்து வருகிறது. இந்திய அரசாங்கத்துடன் செபியும் இதற்கான அனுமதியை வழங்கி விட்டது.

ALSO READ: Good news! LIC ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, விரைவில் அறிவிப்பு!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ 

இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News