குழந்தைகளின் எதிர்காலத்துக்கான சிறந்த காப்பீட்டுத் திட்டத்தை LIC நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த புதிய திட்டத்தில் பயன் பெறுவது எப்படி என்று நாம் பார்போம்.
குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்காலத்துக்கான சிறந்த காப்பீட்டுத் திட்டத்தை LIC நிறுவனம் வழங்கி வருகிறது. அத்திட்டத்தில் பயன் பெறுவது எப்படி என்று இங்கே பார்க்கலாம். இன்றைய கொரோனா (Corona Wave) காலகட்டத்தில் எந்தவொரு பெற்றோருக்கும் அவர்களின் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு இப்போதே திட்டமிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. முன்கூட்டியே சரியான திட்டத்தை திட்டமிட்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
அந்தவகையில் குழந்தைகளுக்கான காப்பீடு திட்டத்தை எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. எல்ஐசி நிறுவனத்தின் ‘New Children’s Money Back Plan’ திட்டம் குழந்தைகளின் கல்வி தொடர்பான செலவுகள், திருமணம் தொடர்பான செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ALSO READ | LIC வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி, வீட்டுக் கடனின் EMI இல் சிறப்பு சலுகை!
இந்த திட்டத்த்தில் பிறந்த குழந்தை முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாலிசி வாங்கலாம். குழந்தைகளின் பெற்றோர் அல்லது பெரிய பெற்றோர் அல்லது தாத்தா - பாட்டி இந்த பாலிசியை குழந்தைகளுக்காக எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் காப்பீட்டிற்கு பாலிசி (LIC policy) எடுக்க முடியும். காப்பீடு செய்ய அதிகபட்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 25 ஆண்டுகள் ஆகும். 25 ஆண்டுகள் நிறைவடைந்ததும் மீதமுள்ள 40 சதவீதம் செலுத்தப்படும். நிலுவையில் உள்ள அனைத்து போனஸ் தொகையும் செலுத்தப்படும். கொடுக்கபட்ட சலுகை காலத்திற்குள் நீங்கள் பிரீமியத்தை செலுத்தாவிட்டால், பாலிசி குறைந்துவிடும். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குள் குறைபாடுள்ள பாலிசியை நீங்கள் புதுப்பிக்க முடியும், ஆனால் அது முதிர்ச்சி காலத்துக்குள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR