இல்லத்தரசிகளுக்கு குளு குளு நியூஸ்... பாதியாக குறையும் சிலிண்டர் விலை!
LPG Cylinder Price: மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்த அதே வேளையில், மாநில அரசின் அறிவிப்பால் அதன் விலை பாதியாக குறைந்துள்ளது.
LPG Cylinder Price: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு சமீபத்தில் குறைத்தது. அதை தொடர்ந்து, அடுத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாநில அரசு மற்றொரு பரிசையும் கிடைத்துள்ளது. மத்திய அரசு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்ததை அடுத்து, கோவா அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாநில அரசின் அறிவிப்புக்கு பிறகு, 'அந்த்யோதயா அன்ன யோஜனா' ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.428க்கு சிலிண்டர் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் மத்திய அமைச்சர் ஷிர்பாட் ஒய் நாயக் ஆகியோர் கோவா தலைநகர் பனாஜியில் எல்பிஜி சிலிண்டர் நிரப்புவதற்கான 'முதலமைச்சரின் நிதி உதவித் திட்டத்தை' தொடங்கினர்.
ரூ. 275 மானியம்
இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தின் 'அந்த்யோதயா அன்ன யோஜனா' ரேசன் அட்டைதாரர்களுக்கு சிலிண்டரில் ரூ.275 மானியமாக மாநில அரசால் வழங்கப்படும். எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என பிரதமர் மோடி முன்னதாக அறிவித்தார். உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு மையத்தின் 200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது தவிர, அந்த்யோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாதம் 275 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என கோவா அரசு அறிவித்துள்ளது.
மாநிலத்தில் 11,000க்கும் மேற்பட்டவர்கள் 'அந்த்யோதயா அன்ன யோஜனா' ரேசன் அட்டைகளை வைத்துள்ளனர். அத்தகைய அட்டை வைத்திருப்பவர்கள் ரூ.200 உஜ்வாலா யோஜனா மானியத்தையும், கோவா அரசால் வழங்கப்படும் ரூ.275 மானியத்தையும் பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.475 மானியம் வழங்கப்படும். அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ஏழைக் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. ரயில்வே தந்த செம நியூஸ்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டதை அடுத்து, கோவா தலைநகர் பனாஜியில் 14.2 கிலோ சிலிண்டர் ரூ.903 ஆக மாறியுள்ளது. அதேசமயம், தெற்கு கோவாவில் சிலிண்டரின் விலை ரூ.917 ஆக இருக்கும்.
இந்த வகையில் ரூ.903 என்ற அடிப்படையில் பார்த்தால், உஜ்வாலா திட்டத்தில் ரூ.200 மானியமும், அரசிடம் ரூ.275ம் கிடைத்தவுடன் சிலிண்டர் விலை ரூ.428 ஆக குறையும். ஆனால், அத்தகைய பயனாளிகளுக்கு சிலிண்டரின் முழு விலையையும் காஸ் ஏஜென்சிக்கு செலுத்த வேண்டும். மானியத் தொகை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
சென்னையில் என்ன விலை?
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இதுவரை வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 1,118 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் 918 ரூபாய் ஆக குறையும்.
இது அனைத்து தரப்பு மக்களுக்கானது என்றாலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள 75 லட்சம் புதிய எல்பிஜி இணைப்புகள் உள்பட பலருக்கு அரசு ஏற்கெனவே 200 ரூபாய் தள்ளுபடியில் வழங்கி வருகிறது. எனவே, அவர்களுக்கு பழைய தள்ளுபடியுடன் இந்த 200 ரூபாயும் குறைக்கப்பட்டு, மொத்தம் 400 ரூபாய் தள்ளுபடி விலையில் சமையல் எரிவாயு சிலிண்டரை அவர்கள் வாங்கலாம்.
தொடர் நடவடிக்கைகள்?
பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சந்தையில் தக்காளி விலை அதிகரித்து வந்த சூழலில், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அது நிவர்த்தி செய்யப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன் வெங்காயத்திற்கு ஏற்றுமதி வரி விதித்து, அதன் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டது.
அதை தொடர்ந்து, மத்திய அரசு தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்தது. அரசின் முடிவிற்குப் பிறகு, தற்போது அனைத்து வீட்டு உபயோகிப்பாளர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் 200 ரூபாய் குறைவாக கிடைக்கும். இந்த அறிவிப்பு, அமைச்சரவை கூட்டத்திற்கு பின் ஆக. 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு ஜாக்பாட்: டி ஹைக்குடன் கூடுதல் நன்மைகள்.. உத்தரவு வெளியானது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ