National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பின் பலனைப் பெறும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான PFRDA, என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கு பயனளிக்கும் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. PFRDA எடுத்துள்ள இந்த முடிவால் உங்கள் கணக்கின் பாதுகாப்பு தற்போது அதிகரித்துள்ளது. உறுப்பினர்களின் ஓய்வூதிய கணக்கின் பாதுகாப்பை அதிகரிக்க, இரண்டு காரணி அங்கீகாரம் (Two Factor Authentication) செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?


PFRDA செய்துள்ள இந்த மாற்றம் காரணமாக, இனி, CRA (Central Record Keeping Agency) அமைப்பில் உறுப்பினர்கள் லாக் இன் செய்ய, அவர்களுக்கு டூ-ஃபேக்டர் ஆதண்டிகேஷன் தேவைப்படும். இது இல்லாமல் கணக்கில் லாக் இன் செய்ய முடியாது. இது தொடர்பான சுற்றறிக்கையை PFRDA 2024 பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியிட்டது. 


PFRDA சுற்றறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது? 


பிப்ரவரி 20-ம் தேதி அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், சிஆர்ஏ அமைப்பை அணுகுவதில் இருக்க வேண்டிய அதிகப்படியான பாதுகாப்பை மனதில் வைத்து, இரு காரணி அங்கீகார வசதியைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுவரவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது சமீப காலங்களில் PFRDA ஆல் கொண்டு வரப்பட்ட பல முக்கிய மாற்றங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. இதனால் என்பிஎஸ் சந்தாதாரர்கள் அதிக பலனடைவார்கள்.  


இந்த புதிய முறை எப்போது அமலுக்கு வரும்?


இந்த புதிய பாட்துகாப்பு முறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. NPS தொடர்பான செயல்பாடுகளை முடிக்க CRA மூலம் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. சிஆர்ஏ என்றால் என்ன? இது இணைய அடிப்படையிலான பயன்பாட்டு அமைப்பாகும். இதில் புதிய லாக் இன் செயல்முறை ஏப்ரல் 1, 2024 முதல் அமல்படுத்தப்படும். 


மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. 5 லட்சம் இலவசம், முதல்வர் அறிவிப்பு
 
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்


தேசிய ஓய்வூதிய அமைப்பை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான PFRDA நிர்வகித்து கட்டுப்படுத்துகிறது. இந்த ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசால் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 16, 2023 நிலவரப்படி, NPS -இல் உள்ள சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 1.36 கோடி ஆக உள்ளது.


தேசிய ஓய்வூதிய அமைப்பு


பணி ஓய்விற்கு பிறகான ஓய்வூ காலத்திற்கு பணத்தை சேர்க்க, பல வகையான திட்டங்கள் உள்ளன. NPS அவற்றில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு (NPS Account Holder) சந்தை அடிப்படையில் வருமானம் கிடைக்கின்றது. என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கு பிற வசதிகளையும் அளிக்கின்றது. இதில் உள்ள தொகையை ஓய்வு பெற்றவுடன் தான் எடுக்க முடியும் என்றில்லை. சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் இதில் முன்கூட்டியே பகுதியளவு தொகையையும் எடுக்க முடியும். உதாரணமாக, குழந்தைகளுக்கான உயர்கல்வி, குழந்தைகளின் திருமணச் செலவுகள், வீடு வாங்குதல் அல்லது கட்டுதல், குறிப்பிட்ட நோய்களுக்கான மருத்துவச் செலவுகள், புதிய வணிகம் / ஸ்டார்ட் அப் தொடங்குதல், திறன் மேம்பாடு போன்றவற்றுக்காக என்பிஎஸ் கணக்கில் பணத்தை எடுக்கலாம். 


மேலும் படிக்க | PM விஸ்வகர்மா திட்டம்... 5% வட்டியில் ₹3 லட்சம் கடன்... ₹500 உதவித்தொகை.. பலன் பெறுவது எப்படி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ