NPS Withdrawal Rules:பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம்.!!

NPS Withdrawal Rules: புதிய விதியின் கீழ், என்பிஎஸ் சந்தாதாரர்கள் (NPS Subscribers) இனி தங்கள் பங்களிப்பில் ஒரு பகுதி தொகையை மட்டுமே திரும்ப எடுக்க முடியும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 8, 2024, 09:01 AM IST
  • NPS இலிருந்து பணம் எடுப்பதற்கான புதிய விதி என்ன?
  • புதிய விதி எப்போது அமலுக்கு வந்தது?
  • எத்தனை முறை முன்பணமாக தொகையை எடுக்கலாம்?
NPS Withdrawal Rules:பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம்.!!

NPS Withdrawal Rules: NPS சந்தாதாரரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் உள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான PFRDA தேசிய ஓய்வூதிய அமைப்பில் (National Pension Scheme) உறுப்பினர்களாக உள்ள சந்தாதாரர்கள் தங்கள் கணக்கிலிருந்து ஓய்வூதியத்தை திரும்பப் பெறுவதற்கான, அதாவது வித்ட்ரா செய்வதற்கான விதிகளில் மாற்றங்களை செய்துள்ளாது. இதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள் பிப்ரவரி 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகள் அமலுக்கு வந்தது முதல் NPS -இல் இருந்து பணத்தை எடுப்பதற்கான (NPS Withdrawal) முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

புதிய விதியின் கீழ், என்பிஎஸ் சந்தாதாரர்கள் (NPS Subscribers) இனி தங்கள் பங்களிப்பில் ஒரு பகுதி தொகையை மட்டுமே திரும்ப எடுக்க முடியும். NPS விதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் முழுமையாக காணலாம். 

NPS இலிருந்து பணம் எடுப்பதற்கான புதிய விதி என்ன?

என்பிஎஸ் உறுப்பினர்கள் (NPS Subscribers), கணக்கை தொடங்கி 3 ஆண்டுகள் ஆன பிறாகே பகுதியளவு தொகையை எடுக்க முடியும் என PFRDA வெளியிட்டுள்ள புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த தொகையானது ஓய்வூதிய கணக்கில் உறுப்பினர் செய்துள்ள பங்களிப்பில் 25 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. 

புதிய விதி எப்போது அமலுக்கு வந்தது

இந்த புதிய விதிக்கான அறிவிப்பை PFRDA ஜனவரி 12, 2024 அன்று வெளியிட்டது. இந்த விதி பிப்ரவரி 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது. 

NPS கணக்கிலிருந்து எப்போது பணத்தை எடுக்கலாம்?

சந்தாதாரரின் குழந்தைகளுக்கான உயர்கல்விச் செலவுகள், குழந்தைகளின் திருமணச் செலவுகள், முதல் வீட்டை வாங்குதல் அல்லது கட்டுதல், குறிப்பிட்ட நோய்களுக்கான மருத்துவச் செலவுகள், புதிய வணிகம் / ஸ்டார்ட் அப் தொடங்குதல், திறன் மேம்பாடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுக்கலாம்.  

மேலும் படிக்க | குறைந்த முதலீடு…நிறைந்த வருமானம்..வீட்டிலிருந்தே ‘இந்த’ தொழில் செய்யுங்கள்!

NPS: எத்தனை முறை முன்பணமாக தொகையை எடுக்கலாம்? 

NPS கணக்கை (NPS Account) திறந்த பிறகு, என்பிஎஸ் உறுப்பினர்  தனது ஓய்வூதியக் கணக்கிலிருந்து அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும். ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு முறை பணத்தை எடுத்தால், அதற்கு பிறகு 5 ஆண்டுகள் ஆன பிறகே அடுத்த முறை பணத்தை எடுக்க முடியும். எனினும், உறுப்பினரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ ஏதாவது தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

NPS: கணக்கிலிருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?

- NPS கணக்கிலிருந்து பணத்தை எடுக்க, முதலில் ஒரு நீங்கள் சுய அறிவிப்பு படிவத்தை (Self-Declaration Form) நிரப்ப வேண்டும்.

- இந்த படிவத்தை சிஐஏ (CIA) அல்லது பாயிண்ட் ஆஃப் ப்ரெசன்ஸ் (Point of Presence) மூலம் டெபாசிட் செய்ய வேண்டும். 

- சந்தாதாரருக்கு ஏதேனும் தீவிர நோய் இருந்து அவரால் படிவத்தை அளிக்க வர முடியாத பட்சத்தில், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவும் அவர் அந்த படிவத்தை சமர்ப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | EPFO Withdrawal Rules: எந்தெந்த சந்தர்ப்பங்களில் பிஎஃப் கணக்கில் முன்பணம் எடுக்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News