ரேஷன் கார்டு அப்டேட்: நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மட்டுமல்லால், மாநில அரசுகளும் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதில் உணவு தானியங்கள் மட்டுமல்லாமல், நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பயனாளிகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உதவிகள் கிடைக்கும் என்று பீகார் முதல்வர் அறிவித்துள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் :
ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகும். இதன் நோக்கம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சையை இலவசமாக, பொருளாதார வசதியில் கீழடுக்கில் இருக்கும் 40% மக்களுக்கு, பலவீனமானவர்களுக்கு அளிப்பதாகும். இத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய, அரசால் முழுவதுமாக மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டம் ஆகும். இதன் மூலம் மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும் மக்கள்தொகை ஆனது ஐக்கிய அமெரிக்க நாடுகள், மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் மொத்தக் கூட்டு மக்கள்தொகையினை விட அதிகம். இத்திட்டம் செப்டப்ம்பர் 2018 ஆம் ஆண்டில், இந்தியா அரசின் ஆரோக்ய மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகம் இன் உறுதுணையுடன் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் ஒரு லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்படும் என்றும் 10 கோடி குடும்பங்களுக்கு சுகாதார வசதி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு நிதி உதவி :
இந்நிலையில் தற்போது பீகார் மாநிலத்தில் இருக்கும் ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் பலன் வழங்கப்படும் என்று பீகார் அரசு தற்போது முடிவு செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு சுகாதார சேவைகள் வழங்க வேண்டும் வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த முக்கிய நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு 5 லட்சம் ரூபாய் இலவசம் :
பொதுமக்களின் நலனுக்காக பீகார் அமைச்சரவை இந்த நடவடிக்கையை தற்போது எடுத்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இனி ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்க பீகார் அரசு முடிவு செய்யதுள்ளது.
மேலும் படிக்க | குறைந்த முதலீட்டில் நிறைந்த வருமானம்-‘இந்த’ வியாபாரம் செய்து பாருங்கள்!
பீகார் அரசு எடுத்த முடிவு :
இது தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறியதாவது, இந்த திட்டத்தை செயல்படுத்த பீகார் அரசு எடுத்த பெரிய முடிவு என்றும், பீகார் அரசு தற்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஆண்டு தோறும் 5 லட்சம் ரூபாய் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் கூடுதல் பலன் என்ன :
தற்போது பீகார் மாநிலத்தில் சுமார் 1.2 கோடிக்கு அதிகமானோர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கிழ் காப்பீடு வசதியைப் பெற்று வருகின்றனர். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருக்கும் மாநிலத்தில் சுமார் 58 லட்சம் பேர் தற்போது இந்த ஆயுஷ்மான் பாரத் காப்பீடு செய்யப்படுவார்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்துடன் தொடர்புடைய நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை வசதி பெறலாம். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் மருத்துவமனை சேர்க்கைக்கு 7 நாட்களுக்கு முன் சிகிச்சை, சேர்க்கையின் போது பரிசோதனை மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 10 நாட்கள் வரை இலவச மருந்துகள் போன்றவை வழங்கப்படும்.
எந்தெந்த சிகிச்சைக்கு இந்த திட்டத்தை பயன்படுத்தலாம்?
இத்திட்டத்தில, கொரோனா, புற்றுநோய், சிறுநீரக நோய், இதய நோய், டெங்கு, மலேரியா, டயாலிசிஸ், போன்ற தீவிர நோய்களுக்கான இலவச சிகிச்சை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ