ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பு: உங்கள் ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் இணைக்கவில்லை என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அந்த வகையில் ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு தற்போது மீண்டும் நீட்டித்துள்ளது. அதன்படி ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2023 ஆக மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த தகவலை நுகர்வோர் விவகாரங்கள் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (Ministry of Consumer Affairs, Food and Public Distribution) வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக இந்த காலக்கெடு ஜூன் 30 ஆக இருந்தது
அந்தோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை உள்நாட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் வெள்ளை ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கார்டை முதலில் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் அதன் பிறகுதான் ஆதார் அட்டையுடன் இணைக்க முடியும்.


மேலும் படிக்க | கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவரா? அக்டோபர் வரை கவலையில்லை


"ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" என்ற கொள்கையை அரசு கொண்டு வந்ததிலிருந்து, ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு தொடர்பாக நடக்கும் குளறுபடிகளைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த கார்டை தவறாக பயன்படுத்தி, பல்வேறு இடங்களில் 2-3 ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்பவர்கள் பலர் உள்ளனர். இதை தடுக்கவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.


டிஜிட்டல் மயமாக்கலுக்குப் பொறுப்பான உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை துணைச் செயலர் நேத்ரா மான்கெம் கூறுகையில், மகாராஷ்டிராவில் 2.56 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். மகாராஷ்டிராவின் பொருளாதார ஆய்வின்படி, 24.4 லட்சம் பேர் அந்தியோதயா அன்ன யோஜனாவின் பயனாளிகளாக உள்ளனர், இது ஏழைக் குடும்பங்களுக்கு அதிக மானிய விலையில் உணவு வழங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.


இந்த நிலையில் நிறையப் பேர் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டை இணைக்காமல் இருந்த நிலையில், ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் பொது விநியோகத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கால அவகாசம் முடிவதற்குள் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது நல்லது. இந்த அறிவிப்பின் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ஆதார்-ரேஷன் கார்டை இணைப்பதற்கான எளிய வழி இதோ


* முதலில் உணவுத் துறையின் இணையதளத்தைத் திறக்கவும்.
* இதற்குப் பிறகு, ''Link Aadhaar with Ration Card' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* உங்கள் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடவும்.
* 'Link Aadhaar and Mobile Number' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* இப்போது உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
* உங்கள் மொபைலில் OTP வரும், அதை உள்ளிடவும்.
* ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கவும்.
* ஆதார்-ரேஷன் கார்டு இணைக்கப்பட்ட பிறகு உங்களுக்கு எஸ்எம்எஸ் வரும்.


மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்.. 2 நாட்களுக்கு பிறகு இலவச ரேஷன் கிடைக்காது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ