உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட்டை பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி
இந்த வாரம் பிபி பிஎல்சி (BP Plc) நிறுவனம் ரிலையன்ஸ் எரிபொருள்-சில்லறை வணிகத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ததால், அவரின் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.
புது டெல்லி: 2020 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி (Mukesh Ambani), வாரன் பபெட் (Warren Buffett) பின்னுக்குத்தள்ளி 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் எனக் கூறப்படுகிறது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் இப்போது 68.3 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரர்.
வியாழக்கிழமை நிலவரப்படி, வாரன் பபெட்டின் 67.9 பில்லியன் டாலர்களை மதிப்பை கடந்து இந்திய பணக்காரரான முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். பேஸ்புக் இன்க் (Facebook Inc) மற்றும் சில்வர் லேக் (Silver Lake) உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து அதன் டிஜிட்டல் யூனிட் 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகளைப் பெற்றதால், மார்ச் மாதத்தில் குறைந்த அளவிலிருந்து அம்பானியின் இந்திய நிறுவனங்களின் பங்குகள் இருமடங்காக அதிகரித்துள்ளன.
READ MORE | FB-Jio ஒப்பந்தம்: மீண்டும் ஆசியா கண்டத்தின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார் அம்பானி
இந்த வாரம் பிபி பிஎல்சி (BP Plc) நிறுவனம் ரிலையன்ஸ் எரிபொருள்-சில்லறை வணிகத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ததால், அவரின் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.
இந்த இரண்டு கம்பனியும் இணைந்து ஜியோ பி பி (Jio BP) என்கிற பெயரில், ஒரு புதிய ஜாயிண்ட் வெஜ்சர் கம்பெனியைத் தொடங்கி இருக்கிறார்கள். இதில் லண்டனைச் சேர்ந்த பிபி கம்பெனி 49 % பங்குகளையும், இந்தியாவின் ரிலையன்ஸ் மீதமுள்ள 51 சதவிகித பங்குகளையும் வைத்திருக்கும்.
READ MORE | போர்ப்ஸின் பணக்கார இந்தியர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி...
முகேசு அம்பானியின் (Mukesh Ambani net worth) சொத்து மதிப்பு உயர்ந்துவிட்ட நிலையில், கடந்த மாதம் உலகின் முதல் 10 பணக்காரர்களின் பிரத்தியேக கிளப்பில் ஆசிய கண்டத்தை சேர்ந்த முகேஷ் அம்பானி மட்டுமே இணைந்தார். 2.9 பில்லியன் டாலர்களை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கிய பின்னர் இந்த வாரம் வாரன் பபெட் (Warren Buffett) சொத்து மதிப்பு குறைந்தது.
63 வயதான முகேஷ் அம்பானி இப்போது உலகின் எட்டாவது பணக்காரர் ஆவார். அவருக்கு அடுத்த இடமான ஒன்பதாவது இடத்தில் வாரன் பபெட் (Warren Buffett) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.