உங்கள் நிலத்தை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க நல்ல வாய்ப்பு Home Stay Yojana என்றால் என்ன?
அதிகரித்து வரும் சுற்றுலாத்துறையின் பயனை உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புடன் இணைப்பதன் மூலம் வளர்ச்சியை விரைவுபடுத்த உ.பி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நீங்கள் உத்தரபிரதேச மாநிலத்தின் சுற்றுலா தளங்கள் (Tourist Place) உள்ள இடத்திற்கு அருகில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கி வருகிறது. மக்களுக்கு வருமானம் வரும் வகையில், உ.பி. வனத்துறையின் (UP Forest department) ஹோம் ஸ்டே யோஜனா (Home Stay Yojana) திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசாங்கம் தயாராகி வருகிறது. அதன் அடிப்படையில் வனத்துறை வரைபடத்தை தயார் செய்துள்ளது. அதிகரித்து வரும் சுற்றுலாத்துறையின் பயனை வேலைவாய்ப்புடன் இணைப்பதன் மூலம் வளர்ச்சியை விரைவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
லக்கிம்பூர் (Lakhimpur) மற்றும் பஹ்ரைச் (Bahraich) போன்ற மிகச் சிறிய பகுதி உட்பட மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு ஹோம் ஸ்டே யோஜனா (Home Stay Yojana) திட்டம். இத்திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகளுக்கு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தங்குவதற்கும், ஓய்வு எடுக்கவும் வனத்துறை வசதிகளை செய்துத்தரும்.
ALSO READ | இந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்!
வாடகை மூலம் வருமானம் பெறலாம் (Earning from Rent):
இத்திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகளுக்கு உறைவிடம் மற்றும் உணவு வசதியை வழங்கக்கூடிய உள்ளூர் மக்களை வனத்துறையினர் (Forest Department) இணைத்துக் கொள்வார்கள். மேலும் உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகள் வரும் போது, அவர்களுக்கு தேவையான சாப்பிட உணவு மற்றும் உதவிகள் செய்யும் போது, வேலைவாய்ப்பை பெறுவார்கள். இத்திட்டத்தின் விரிவாக்கத்திற்காக, வனத்துறை நிறுவனம் பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கியுள்ளது. ஹோம் ஸ்டே திட்டம் சுற்றுலா பகுதிகளுக்கு (Tourist Place) அருகிலுல் உள்ளோர்களுக்கு அதிகபட்சமாக வேலைவாய்ப்பை வழங்கும்.
ஹோம் ஸ்டே யோஜனாவில் பதிவு செய்வது எப்படி (How to register in Home Stay Yojana):
ஹோம் ஸ்டே யோஜனா திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படும் என்று இத்திட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விண்ணப்பதாரர்களின் நடத்தை, கல்வி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய முழுமையான தகவல்கள் சேகரித்து பின்னர் இந்த திட்டத்துடன் இணைக்கப்படுவார்கள். வனத்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு எப்படி வசதியை ஏற்படுத்தி தருவது மற்றும் பாதுகாப்பு அளிப்பது தொடர்பான இலவச பயிற்சியையும் வழங்கும்.
ALSO READ | ரயில்வேயுடன் இணைந்து பிஸினஸ் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!
உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் (Employment available for Village People):
ஹோம் ஸ்டே யோஜனாவில் பதிவுசெய்யப்பட்ட நபர்களும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாகவும் வேலைபார்க்க முடியும். இதற்காக, சுற்றுலாப் பயணிகளுடன் பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் அவர்கள் சம்பாதிக்க முடியும். இதன் கீழ், நில உரிமையாளருடன் சேர்ந்து, பராமரிப்பாளர், சமையல்காரர், துப்புரவாளர் மற்றும் பாதுகாப்பு போன்ற வேலைகள் உள்ளூர் மக்களுக்கு கிடைக்கும். லக்கிம்பூர், பஹ்ரைச், பிலிபிட், மகாராஜ்கஞ்ச், பரேலி, துத்வா வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள், அத்துடன் புதேல்கண்ட் மற்றும் பூர்வஞ்சல் பகுதிகள் விரிவாக்கப்பட வாய்ப்புள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR