Centre: புத்தாண்டு முதல் வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீங்குகிறது
அனைத்து வகையான வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்வதற்கான தடை ஜனவரி முதல் தேதியில் இருந்து நீக்கப்படுகிறது. வெங்காய ஏற்றுமதி செய்வதற்கு செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மத்திய அரசு தடை விதித்தது.
புதுடெல்லி: அனைத்து வகையான வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்வதற்கான தடை ஜனவரி முதல் தேதியில் இருந்து நீக்கப்படுகிறது. வெங்காய ஏற்றுமதி செய்வதற்கு செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மத்திய அரசு தடை விதித்தது.
வெங்காய ஏற்றுமதியில் (export) மகாராஷ்டிர மாநிலம் முன்னிலை வகிக்கிறது. கடந்த நிதியாண்டில் 18.5 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை மகாராஷ்டிர மாநிலம் ஏற்றுமதி செய்திருக்கிறது. ஆனால் கனமழை உள்ளிட்ட பல காரணிகளால் வெங்காய (onion) விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. கொரோனாவில் நாட்டில் லாக்டவுன் (Lockdown) விதிக்கப்பட்டிருந்தபோது வெங்காய விலை மிக உச்சத்தைத் தொட்டது.
வெங்காய ஏற்றுமதிக்கு (Export) மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதனால், இந்தியாவில் இருந்து வெங்காயத்தை வாங்கும் நேபாளம் உட்பட பல நாடுகளில் வெங்காய விலை அதிகரித்தது.
தற்போது இந்தியாவில் வெங்காய உற்பத்தி அதிகரித்திருக்கிறது. அதோடு, உள்நாட்டில் வெங்காய (Onion) விலையும் நிலைபெற்று விட்டது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது.
Also Read | ஜாதிப் பெயரை காரில் எழுதிய Lucknow இளைஞருக்கு நோட்டீஸ்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR