Latest Business News In Tamil: நீங்கள் நல்ல சம்பளம் பெற்று, சேமிப்பு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு சேமிக்க தொடங்கினால், நீங்கள் கோடீஸ்வரராக மாறுவது யாரும் தடுக்க முடியாது. எஸ்ஐபி மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் மூலம் இது சாத்தியமாகும். எஸ்.ஐ.பி (Systematic Investment Plan) மியூச்சுவல் ஃபண்டுகளின் சராசரி நீண்ட கால வருவாய் சுமார் 12% ஆகும். இது உங்கள் பணவீக்கத்தை குறைத்து மற்ற திட்டங்களை விட சிறந்த வருமானத்தை வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SIP முதலீட்டின் ஃபார்முலா என்ன? 


40 வயதிற்குள் இருப்பவர்கள் "12-15-20" என்ற ஃபார்முலா அடிப்படையில் முதலீடு செய்யத் தொடங்கினால் நீங்கள் மில்லியனர் ஆக மாறலாம்.


>> SIP மியூச்சுவல் ஃபண்டுகளில் எதிர்பார்க்கப்படும் சராசரி ரிட்டன் 12 சதவீதம்
>> முதலீடு செய்யும் காலம் 15 ஆண்டுகள்
>> மாதம் முதலீடு செய்யும் தொகை 20,000 ரூபாய்


ரூ.20,000 மாதம் முதலீடு செய்வது எப்படி?


உங்கள் மாதச் சம்பளம் ரூ. 1,00,000 என வைத்துக்கொண்டாள், அதில் 20 சதவீதம் முதலீடு செய்யுங்கள். ஒரு லட்சத்தில் 20 சதவீதம் என்பது (ரூ.1,00,000 இல் 20%) ரூ. 20,000 ஆகும். உங்கள் செலவுகளை நீங்கள் சரியாக திட்டமிட்டு பட்ஜெட் போட்டு செய்தால், இந்தத் தொகையை SIP இல் முதலீடு செய்யுங்கள்.


SIP மியூச்சுவல் ஃபண்டுகள் பாதுகாப்பானதா?


SIP மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தையுடன் இணைக்கப்பட்டு, சந்தையின் செயல்திறனைப் பொறுத்து உங்களுக்கு வருமானம் கிடைக்கும். இருப்பினும், இது நிலையானது மற்றும் நீண்ட கால முதலீடு லாபகரமானது.


12% ரிட்டன் உத்தரவாதமா?


உறுதியாக சொல்ல முடியாது. சந்தையுடன் சேர்ந்த முதலீடு என்பது, இவ்வளவு தான் கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது. இது சந்தையின் நிலவரம் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபண்டுகளை பொறுத்தது. ஆனால் இதுவரை SIP மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் கிடைத்த ரிட்டனை வைத்துக் பார்க்கும் 12% ரிட்டன் அல்லது அதற்கு அதிகாம கூட கிடைக்கலாம். ஆனால் நீங்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது சாத்தியப்படலாம்.


15 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியமா?


ஆம், ஒரு நல்ல கூட்டுத்தொகையை ரிட்டனாக பெற வேண்டும் என்றால் நீண்ட கால முதலீடு முக்கியமானது. குறுகிய கால முதலீடு மூலம் கோடீஸ்வரராக மாற சாத்தியமில்லை.


SIP இல் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு உள்ளதா?


நீங்கள் SIP இல் குறைந்தபட்ச முதலீடு செய்ய நினைத்தால் ரூ. 500 முதல் தொடங்கலாம். ஆனால் நீங்கள் மில்லியனர் ஆக மாற வெட்நும் என நினைத்தால், உங்கள் வயதிற்கு ஏற்ப தொகையை முதலீடு செய்ய வேண்டும்.


வருமானத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?


சந்தை செயல்திறனை மதிப்பாய்வு செய்து, உங்கள் பணத்தை நல்ல ஃபண்டுகளை தேர்ந்தெடுத்து, தொடர்ந்து முதலீடு செய்யும் போது உங்களுக்கான வருமானத்தை அதிகமாக்கலாம்.


மேலும் படிக்க - புதுமண ஜோடிகளே... வாழ்க்கையில் பணப் பிரச்னை வராமல் இருக்க... இதை கண்டிப்பாக படிங்க!


மேலும் படிக்க - PPF Calculator: வெறும் ரூ.500 முதலீடு செய்து ரூ.26 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுவது எப்படி?


மேலும் படிக்க - SIP Mutual Fund: மாதம் ரூ.1000 முதலீட்டை ஒரு கோடி ரூபாயாக மாற்றிய முதலீட்டு ஃபார்முலா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ