மின்சாரம், ஸ்டீல், நிலக்கரி, இயற்கை எரிவாயு உள்ளிட்ட 8 முக்கிய தொழில்துறைகளின் வளர்ச்சியில் கடும் சரிவு கண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் பொருளாதாரத்திற்கு தூணாக விளங்கும் மின்சாரம், ஸ்டீல், நிலக்கரி, இயற்கை எரிவாயு உள்ளிட்ட 8 முக்கிய தொழில்துறைகளின் வளர்ச்சியில் கடும் சரிவடைந்துள்ளது. பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றும் நிலக்கரி, கச்சா  எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், எஃகு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளின் ஜூலை மாத வளர்ச்சி 2.1% ஆக குறைந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 7.3%-ஆக இருந்தது. 


இந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூலை மாத காலகட்டத்தில் இந்த வளர்ச்சி 3%-ஆக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 5.9%-ஆக வளர்ச்சி விகிதம்  இருந்தது. வாங்கும் திறன் மற்றும் குறைந்துவிட்ட உற்பத்தி திறனின் காரணமாக 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் GDP 5%-ஆக சமீபத்தில் குறைந்தது.


தற்போது வெளிவந்துள்ள தரவுகளின் படி இந்த 8 முக்கிய துறைகளில் 5 துறைகளின் வளர்ச்சி விகிதம் மிகுவும் பலமாக குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நிலக்கரி, கச்சா எண்ணெய்,  இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்பு பொருட்கள், ஜூலை மாதத்தில் எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. 


கடந்த 2018 ஏப்ரல் - ஜூலை மாதங்களில் இத்துறைகளின் வளர்ச்சி 5.9% வளர்ச்சி அடைந்திருந்த நிலையில், 2019  ஏப்ரல் - ஜூலை மாதங்களில், 3% மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இருப்பினும், ஜூலை மாதத்தில் சிமென்ட், எஃகு மற்றும் மின்சாரம் ஒழுக்கமான வளர்ச்சியைப் பதிவு செய்தன, இது 7.9 சதவீதம், 6.6 சதவீதம் மற்றும் 4.2 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்துள்ளது. உர உற்பத்தி மாதத்தில் 1.5 சதவீதமாக வளர முடிந்தது.


ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மதிப்பீடுகள் இந்த காலகட்டத்தில் இந்திய பொருளாதாரம் வெறும் 5 சதவீத வளர்ச்சியால் முற்றிலும் சரிவைக் காட்டியது. உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றின் கணிசமான வீழ்ச்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியை 25 காலாண்டுகளில் மிகக் குறைந்த நிலைக்கு இழுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.