உயர்கிறது FD கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள்! எவ்வளவு தொகை கிடைக்கும்?
ஹெச்டிஎஃப்சி தனது நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.10 சதவீதம் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த வாரம் முதல் இருமாத கடன் கொள்கையை அமல்படுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இது பிக்ஸட் டெபாசிட்டுகளில் பணத்தை முதலீடு செய்திருப்பவர்களுக்கு நல்ல பலனை தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பல வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பிக்ஸட் டெபாசிட்டு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை அதிகரித்து வருகிறது. ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி தனது நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.10 சதவீதம் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது. 6.40 சதவீதத்திற்குப் பதிலாக, 60 மாத நிலையான வைப்புத்தொகைக்கு 6.50% வட்டியை ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
மேலும் படிக்க | EPFO உறுப்பினர்கள் எச்சரிக்கை! PF தொடர்பான இந்த வேலையை விரைவில் செய்யுங்கள்!
மேலும் 36 மாத பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.05%க்கு பதிலாக 6.10% வட்டி கிடைக்க போகிறது. அதேபோல மூத்த குடிமக்களின் இந்த பிக்ஸட் டெபாசிட்டு கணக்குகளில் முதலீடு செய்வது நிலையான வட்டி விகிதத்தை விட 25 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி பெறும். ஹெச்டிஎஃப்சி மட்டுமின்றி, பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனமும் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸ் வட்டி விகிதங்களை 30 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸில் 24 மாத பிக்ஸட் டெபாசிட்டுக்கு இப்போது 6.40% வட்டி கிடைக்கும், முன்பு இதற்கு 6.10% வட்டி கிடைத்தது.
அதே சமயம் 36 மாத பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.80% வட்டி கிடைக்கும், முன்பு 6.5% வட்டி கிடைத்தது. பணவீக்கம் அதிகரித்து வருவதால், இனிவரும் நாட்களில் வட்டி விகிதங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் 8-ம் தேதி இருமாத கடன் கொள்கையை அறிவிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில். இதில் வட்டி விகிதங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே டெபாசிட் மீதான வட்டி விகிதத்தை அதிகரிக்கும் செயல்முறையை வங்கிகள் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: அடுத்த வாரத்தில் வெளியாக இருக்கும் முக்கிய தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ