பெரும்பாலானோருக்கு பணம் ரொட்டேஷனுக்கு உதவியாக இருக்கும் கிரெடிட் கார்டை நீங்கள் சரியாக பயன்படுத்தினால், உங்களுக்கு எந்த உபத்திரவமும் இருக்காது. ஆனால், அதனை நீங்கள் தலைவலியாக மாற்றினால், வங்கி மற்றும் கடன் தேவைகளுக்கான நிதிச்சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். கிரெடிட் கார்டை சரியான பயன்படுத்தினால், வங்கிக் கடன் மற்றும் சிபில் ஸ்கோர் உள்ளிட்டவைகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். அத்தகைய கிரெடிட் கார்டை நீங்கள் மேம்படுத்துவதற்கு தேவையான 4 டிப்ஸ்களை தான் நாம் இங்கு பார்க்க இருக்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரெடிட் கார்டு சிறப்பம்சம்


கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பயண முன்பதிவு, ஆன்லைன் ஷாப்பிங் உள்ளிட்டவைகளை செய்தால் உங்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள் மற்றும் ஆஃபர்கள் கிடைக்கும். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு என்றே சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் ஆஃபர்கள் அறிவிக்கப்படுவதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அனைத்து வங்கிகளும் வழிமுறைகளுக்கு ஏற்ப கிரெடிட் கார்டு நன்மைகளைக் கொடுக்கின்றன.


அப்படியான கிரெடிட் கார்டுகள் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கும் அம்சத்துடன் வருகின்றன. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் உங்கள் கார்டை அப்கிரேடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் வங்கியின் வழிமுறைகளுக்கு ஏற்ப செலவினங்கள் இருந்தால், உங்களுக்கு வருடாந்திர கட்டணம் கூட தளுப்படி செய்யப்படும்.


மேலும் படிக்க | பணக்காரர்களை குறிவைத்து கிரெடிட் கார்டில் புதிய மோசடி - உஷார் மக்களே..!


கவனத்தில் கொள்ள வேண்டியவை


நீங்கள் உங்கள் கார்டை மேம்படுத்தும் போது, ​​வழங்குபவர்கள் உங்கள் கடன் வரம்பை அதிகரிப்பார்கள். “அதிக கடன் வரம்பு உங்களுக்கு பல வழிகளில் பயனளிக்கும். நீங்கள் அதிக கடன் வாங்கும் வாய்ப்பை பெறுவீர்கள் மற்றும் நிதி நெருக்கடியின் போது இந்த கூடுதல் தொகை உங்களுக்கு உதவியாக இருக்கும். அதிக வரம்பு உங்கள் ஒட்டுமொத்த கடன் பயன்பாட்டு விகிதத்தையும் குறைக்கும், இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தும். மேலும், மேம்படுத்துதலின்போது ரிவார்டு பேலன்ஸ் சேர்க்கப்படுமா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ரிடீம் செய்ய வேண்டுமா? என்பதை சேவை மைய அதிகாரியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதனை தெளிவுபடுத்தும்போது உங்களுக்கான ரிவார்டு புள்ளிகளை நீங்கள் இழக்கமாட்டீர்கள். 



கூடுதல் தகவல்கள்


* நீங்கள் ஷாப்பிங் கிரெடிட் கார்டைத் தேர்வுசெய்தால், ரிவார்டுகள், கேஷ்பேக் அல்லது நேரடித் தள்ளுபடி வடிவில் மதிப்பு திரும்பப் பெறப்படுமா? என்பதைச் சரிபார்க்கவும்.


* வழங்கப்படும் பலன்களின் தொகுப்பிற்கு வங்கியால் விதிக்கப்படும் வருடாந்திரக் கட்டணம் நியாயமானதா என்பதைப் பார்க்க, செலவு-பயன் ஆகியவற்றை நீங்கள் பகுப்பாய்வு செய்யுங்கள்


* நீங்கள் உங்கள் கார்டை மேம்படுத்தும் போது, ​​வழங்குபவர்கள் பொதுவாக உங்கள் கடன் வரம்பை அதிகரிப்பார்கள். அதிக வரம்பு உங்கள் ஒட்டுமொத்த கடன் பயன்பாட்டு விகிதத்தைக் குறைக்கும்.


மேலும் படிக்க | கிரெடிட் கார்டு தொகையை EMI ஆக மாற்றுவதால் யாருக்கு லாபம்? தெரிந்து கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ