வீட்டுக்கடன் EMI முழி பிதுங்க வைக்குதா? குறைக்க 5 எளிய டிப்ஸ் இதோ
Home Loan: கடன் EMIகளைக் குறைப்பதற்கான எளிதான வழி, முடிந்தவரை ப்ரீ-பேமண்ட் செலுத்துவதாகும். உங்கள் செலவுகளுக்கு கூடுதலாகச் சேமிப்பு இருந்தால் அல்லது ஏதாவது ஆதாரம் மூலம் நீங்கள் பெரிய தொகையைப் பெற்றால், உங்கள் கடன் EMI-யின் ப்ரீ-பேமண்ட் செய்து அதை குறைக்கலாம்.
வீட்டுக் கடன் இஎம்ஐ-யை எப்படிக் குறைப்பது:அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளால் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்குப் பிறகு, பல வங்கிகள் தங்கள் வீட்டு கடன் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. இது வீட்டுக் கடன், வாகனக் கடனின் மாதாந்திர தவணை (EMI) மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், வீட்டுக் கடனின் விலையுயர்ந்த EMI ஐக் குறைக்க விரும்பினால், அதற்கான 5 குறிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
முடிந்தவரை ப்ரீ-பேமண்ட் செய்யவும்
கடன் EMIகளைக் குறைப்பதற்கான எளிதான வழி, முடிந்தவரை ப்ரீ-பேமண்ட் செலுத்துவதாகும். உங்களின் செலவுகளுக்கு கூடுதலாகச் சேமிப்பு இருந்தால் அல்லது ஏதாவது ஆதாரம் மூலம் நீங்கள் பெரிய தொகையைப் பெற்றால், உங்கள் கடன் EMI-யின் ப்ரீ-பேமண்ட் செய்து அதை குறைக்கலாம். நீங்கள் ப்ரீ-பேமண்ட் செலுத்தும் போதெல்லாம், அந்தத் தொகை நேரடியாக அசல் தொகையிலிருந்து குறைக்கப்படும். இந்த வழியில் உங்கள் மாதாந்திர தவணை குறைக்கப்படுகிறது.
கடன் காலத்தை நீட்டிக்கவும்
பல நேரங்களில் வீட்டுக் கடன் EMI காரணமாக மாதாந்திரச் செலவுகள் பாதிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு கூடுதல் வருமானம் அல்லது சேமிப்பு இல்லாமல் போனால், கடனின் கால அளவை அதிகரிப்பதன் மூலம் நீங்கள் EMI ஐக் குறைக்கலாம். எனினும், இதனால் அதிக வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும் படிக்க | வீடு வாங்கலையோ வீடு! 5 பெட்ரூம் வீடு வாங்கினா டெஸ்லா கார் ஃப்ரீ
வீட்டுக் கடனை மாற்றவும்
வீட்டுக் கடன் வங்கியைத் தேர்ந்தெடுக்கும்போது எப்போதும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். நல்ல டீல் எங்கு கிடைக்கிறதோ, அங்கு கடன் பெறவும். சில சமயம் நீங்கள் ஒரு வங்கியில் இருந்து கடன் பெற்றிருப்பீர்கள், ஆனால், மற்ற ஒரு வங்கியில் கடன் விகிதம் குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில், கடனை அந்த வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம். எப்போதும் சிறந்த டிலை தேர்ந்தெடுத்து கடனை உங்களுக்கு ஏற்ற வங்கிக்கு மாற்றிக்கொள்ளவும்.
சிறந்த விகிதங்களுக்கு வங்கியிடம் பேசுங்கள்
வங்கிகள் சில நேரங்களில் நல்ல ரீபேமண்ட் டிராக் மற்றும் சிபில் ஸ்கோரை கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதங்களில் கூடுதல் நிவாரணம் அளிக்கின்றன. உங்களிடம் நல்ல ரெகார்ட் இருந்தால், முடிந்தவரை குறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைப் பெற உங்கள் வங்கியுடன் பேசலாம். இது உங்கள் EMI-ஐ குறைக்கும்.
டவுன் பேமண்டை அதிகரிக்கலாம்
வீட்டுக் கடனைப் பெறும்போது, டவுன் பேமண்டை முடிந்தவரை அதிகமாகச் செலுத்த முயற்சிக்கவும். ஏனென்றால், ரூ.1-2 லட்சம் அளவிலான அதிக டவுன் பேமண்ட்டும் இஎம்ஐ-ஐ ரூ.2-3 ஆயிரம் வரை குறைக்கலாம். இது தவிர வட்டியும் மிச்சமாகும்.
(குறிப்பு: இந்த குறிப்புகள் PNBHousing இன் வலைப்பதிவு மற்றும் நிபுணர்களுடனான உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டவை.)
மேலும் படிக்க | வீடு வாங்கும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ