2023இல் வீடுகள் விற்பனை அதிகரிக்கும்! வாங்குபவர்களை விட விற்பவர்களுக்கு லாபம் அதிகம்
Houses For Sale: இந்த ஆண்டு மக்கள் வீடுகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்றும், எனவே, வீடுகளின் விலை 8 முதல் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வீட்டு விற்பனை உயர்வு: உங்களுக்கும் வீடு வாங்கும் திட்டம் இருந்தால், இது உங்களுக்கு நல்ல செய்தி. இந்த நேரத்தில், ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது, அதில் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கையில் நிறைய வளர்ச்சியைக் காணலாம் என்று கூறப்படுகிறது.
வீடு விற்கும் எண்ணம் இருப்பவர்களுக்கு, இது நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் ஒரு ஆய்வு அறிக்கையில், வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கையில் வளர்ச்சியைக் காணலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் வட்டி விகிதங்கள் மற்றும் வீட்டு விலைகள் அதிகரித்த போதிலும், நடப்பு நிதியாண்டில் வீட்டு விற்பனை 8-10 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக நாட்டின் ஆறு முக்கிய நகரங்களில் உள்ள குடியிருப்புத் துறையின் டெவலப்பர்கள் தெரிவித்துள்ளனர்.
அறிக்கை என்ன சொல்கிறது?
கிரிசில் (Crisil) என்ற மதிப்பீட்டு நிறுவனத்தால் புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, வருவாய் மற்றும் கடன் சுமை குறைப்பு ஆகியவற்றால் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் நம்பகத்தன்மையும் பலப்படும். நடுத்தர, பிரீமியம் மற்றும் சொகுசு பிரிவுகளில் வீடுகளுக்கான தேவை அதிகரித்ததன் விளைவாக கடந்த இரண்டு நிதியாண்டுகளில் வீடுகள் வாங்கும் மக்களின் மனோபாவம் மாறியிருக்கிறது.
இது ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் லாபம் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்த உதவியது மற்றும் நடுத்தர காலத்தில் இந்தப் போக்கு தொடரும் என்றும் இதன் அடிப்படையில் 2023-24ஆம் ஆண்டில் வீடுகள் விற்பனை அதிகரிக்கும், வாங்குபவர்களின் எண்ணிக்கையும் 8 முதல் 10 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று அறிக்கை கூறுகிறது.
ரியல் எஸ்டேட் துறை
ரியல் எஸ்டேட் துறையில் 11 பெரிய மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் 76 சிறிய மற்றும் நடுத்தர குடியிருப்பு ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கிரிசில் அறிக்கை
ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியால் குடியிருப்பு ரியல் எஸ்டேட்டுக்கான தேவை அதிகரித்து வருவதாக கிரிசில் ரேட்டிங்ஸ் இயக்குநர் அனிகேத் டானி தெரிவித்தார். கொரோனா மற்றும் கோவிட் காலத்திற்கு பிறகு, அலுவலகங்களின் வேலை செய்யும் இடம் தொடர்பான கலப்பின மாதிரி தொடங்கிவிட்டதும் இதற்குக் ஓரளவுக்கு காரணம் என்று தெரிகிறது.
மேலும் படிக்க | Home Loan: வீட்டுக் கடன் கிடைக்கவில்லையா? இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்!
வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும்
அறிக்கையின்படி, அத்தகைய சூழ்நிலையில், வட்டி விகிதங்கள் மற்றும் மூலதன மதிப்புகள் அதிகரித்தாலும், வீடுகளுக்கான தேவை 8-10 சதவீதம திகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு 4.5 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்பு வளாகங்களில் வீடு விற்பனை இருந்ததைவிட இப்போது அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
ரியல் எஸ்டேட் 50 சதவீதம் அதிகரித்துள்ளது
11 பெரிய மற்றும் பட்டியலிடப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விற்பனை கடந்த நிதியாண்டில் மதிப்பீட்டு அடிப்படையில் 50 சதவீதமும், பரப்பளவு அடிப்படையில் 20 சதவீதமும் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | வீடு வாங்கலையோ வீடு! 40 வருச கடன்! மிகவும் குறைந்த இ.எம்.ஐயில் கடன் தர நாங்க ரெடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ