EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் நிர்வகிக்கப்படும் EPF, ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி பாதுகாப்பாக உள்ளது. இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) அரசாங்கம் வருடாந்திர வட்டி சலுகையை வழங்குகிறது. இதன் மூலம் உறுப்பினர்களின் பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் காணப்படுகின்றது. மாதா மாதம் பிஎஃப் நிதிக்கு பங்களிக்கும் இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) இபிஎஃப் -இன் சில முக்கியமான விதிகள் மற்றும் EPFO அளிக்கும் வசதிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பிஎஃப் இருப்புத் தொகைக்கான வட்டி  தவிர உறுப்பினர்ளுக்கு இதில் இன்னும் பல வசதிகளும் கிடைக்கின்றன. இது ஊழியர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎஃப் மூலம் பல நன்மைகள் சந்தாதாரர்களுக்கு கிடைக்கின்றன. இபிஎஃப் நிதியை நிர்வகிக்கும் EPFO மூலம் நடத்தப்படும் பணியாளர் ஓய்வூதியத் திட்டமான (Employee Pension Scheme) EPS ஒரு சிறப்பான திட்டமாக உள்ளது. இதன் மூலம் பிஎஃப் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தின் பலனைப் பெற விரும்பும் பணியாளர்கள் இது குறித்த சில முக்கியமான விஷயங்களைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.


PF உறுப்பினர்களுக்கு மாதா மாதம் ஓய்வூதியம் கிடைக்கும்


இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுவதற்கான விதிமுறை உள்ளது. பிஎஃப் ஊழியர்களுக்கு வேலையை விட்டு வெளியேறிய பிறகு EPFO ​​மாதாந்திர ஓய்வூதியத்தின் பலனை வழங்குகிறது. இது குறித்து அனைத்து பிஎஃப் உறுப்பினர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். PF ஊழியர்களுக்காக அரசாங்கம் EPF மற்றும் EPS திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.


PF ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு மாதா மாதம் ஓய்வூதிய பலன் கிடைக்கும். பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற அதற்கான விதிமுறை உள்ளது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தை இயக்கும் பணி இபிஎஃப் மூலம் செய்யப்படுகிறது. திட்டத்துடன் தொடர்புடைய முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்திலிருந்து ஒரு நிலையான தொகையை PF கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். 


மேலும் படிக்க | PPF: மாதம் ரூ.12,500 முதலீட்டில்... ஒரு கோடியை பெறுவது எப்படி..!!


ஊழியர் கணக்கில் எவ்வளவு பங்களிப்பார்களோ, அதே அளவிற்கு நிறுவனமும் பங்களிக்கிறது. நிறுவனத்தில் பங்களிப்பில் 3.67% பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கும், 8.33% பணியாலர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் செல்கிறது. PPF இல் முதலீட்டாளர்கள் EDLI காப்பீட்டின் பலனை எளிதாகப் பெறுவார்கள்.


சில காரணங்களால் ஊழியர் இறந்தால், நாமினிக்கு ரூ.7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உள்ள கால்குலேட்டரின் உதவியுடன் ஊழியர்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய ஓய்வூதிய பலன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


- இதற்கு பணியாளர்கள் முதலில் Pension Calculator பக்கத்தைத் திறக்க வேண்டும்.


- அதன் பின்னர் பின்னர் பணியாளர் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். 


- இதற்குப் பிறகு, பணியில் சேர்வது மற்றும் வெளியேறுவது போன்ற மற்ற அனைத்து தகவல்களையும் நிரப்ப வேண்டும். 


- அதன் பிறகு முழு கணக்கீட்டையும் காண முடியும்.


மேலும் படிக்க | EPFO Early Pension என்றால் என்ன? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ