EPFO Early Pension என்றால் என்ன? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி?

EPFO Early Pension: ஒரு பணியாளர் EPFO ​​இலிருந்து ஓய்வூதியம் பெற தகுதியுடையவராக இருந்து, அவரது வயது 50 வயது முதல் 58 வயது வரை இருந்தால், அப்போதுதான் அவர் முன்கூட்டிய ஓய்வூதியம் அதாவது எர்ளி பென்ஷனுக்கான விண்ணப்பிக்க முடியும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 23, 2024, 06:59 PM IST
  • Early Pension பெற எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
  • Early Pension: எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
  • பங்களிப்பு 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் என்ன நடக்கும்?
EPFO Early Pension என்றால் என்ன? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? title=

EPFO Early Pension: 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்துள்ள இபிஎஃப்ஓ ​​உறுப்பினர்கள் (EPFO Members) EPS திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள். வழக்கமாக, ஓய்வு பெறும் வயதில் இந்த ஓய்வூதியத்தை அவர்கள் பெறுகிறார்கள். ஆனால் ஒருவர் 58 வயதுக்கு முன் ஓய்வூதியம் பெற விரும்பினால், அவர் முன்கூட்டிய ஓய்வூதியத்தைப் (Early Pension) பெற ஏதேனும் வழி உள்ளதா? பலரின் மனதில் இந்த கேள்வி உள்ளது. இதற்கான பதிலை இந்த பதிவில் காணலாம். 

Early Pension பெற எப்போது விண்ணப்பிக்க வேண்டும்? 

- ஒரு பணியாளர் EPFO ​​இலிருந்து ஓய்வூதியம் பெற தகுதியுடையவராக இருந்து, அவரது வயது 50 வயது முதல் 58 வயது வரை இருந்தால், அப்போதுதான் அவர் முன்கூட்டிய ஓய்வூதியம் அதாவது எர்ளி பென்ஷனுக்கு விண்ணப்பிக்க முடியும். 

- ஆனால், ஊழியர் 50 வயதுக்கு குறைவாக இருந்தால், ஓய்வூதியத்தை கோர முடியாது. 

- அத்தகைய சூழ்நிலையில், வேலையை விட்டு வெளியேறிய பிறகு, அவருக்கு EPF இல் டெபாசிட் செய்யப்பட்ட நிதி மட்டுமே கிடைக்கும். 

- 58 வயது முதல் ஓய்வூதியம் கிடைக்கும். 

- Early Pension பெற, ஊழியர் Composite Claim Form -ஐ நிரப்பி, எர்ளி பென்ஷனுக்கான படிவம் மற்றும் 10D விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மேலும் படிக்க | 60 வயதில் மாதம் ரூ.50,000 பென்ஷன் வாங்கணுமா? NPS தான் அதற்கு சரியான சாய்ஸ், கணக்கீடு இதோ

Early Pension: எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

58 வயதிற்கு முன், எத்தனை ஆண்டுகளுக்கு முன் நீங்கள் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கிறீர்களோ, ஓய்வூதியம் உங்களுக்கு அத்தனை குறைவாக கிடைக்கும் என்பதை இங்கே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டுக்கும் 4% வீதம் ஓய்வூதியம் குறைக்கப்படுகிறது. அதாவது ஒரு இபிஎஃப்ஓ உறுப்பினர் (EPFO Members) 56 வயதில் குறைக்கப்பட்ட மாதாந்திர ஓய்வூதியத்தை பெற முடிவு செய்தால், அவர் அடிப்படை ஓய்வூதியத் தொகையில் 92% தொகையை பெறுவார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பித்தால், அடிப்படை ஓய்வூதியத் தொகையில் 8% குறைவாகப் பெறுவீர்கள்.

பங்களிப்பு 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் என்ன நடக்கும்?

EPFO க்கு உங்கள் பங்களிப்பு 10 வருடங்களுக்கும் குறைவாக இருந்தால், நீங்கள் ஓய்வூதியம் பெற முடியாது. அத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. 

- முதலில், நீங்கள் வேலையில் தொடர விரும்பவில்லை என்றால், நீங்கள் PF தொகையுடன் ஓய்வூதியத் தொகையையும் எடுத்துக்கொள்ளலாம்.

- இரண்டாவது விருப்பம், எதிர்காலத்தில் மீண்டும் வேலையில் நீங்கள் சேரக்கூடும் என உங்களுக்கு தோன்றினால், பென்ஷன் திட்டச் சான்றிதழை (Pension Scheme Certificate) எடுத்துக் கொள்ளலாம். 

இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் எப்போது புதிய வேலையில் சேருகிறீர்களோ, அந்தச் சான்றிதழ் மூலம் உங்களின் முந்தைய ஓய்வூதியக் கணக்கை புதிய வேலையுடன் இணைக்கலாம். இதன் மூலம், 10 ஆண்டு கால வேலையில் உள்ள பற்றாக்குறையை, அடுத்த வேலையில் ஈடு செய்து, ஓய்வு பெறும் வயதில் ஓய்வூதியம் பெறலாம்.

மேலும் படிக்க | பெண்களுக்கான அட்டாகாசமான சேமிப்புத் திட்டங்கள்: சூப்பர் வட்டி, பம்பர் வருமானம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News