கிரெடிட் கார்டுகள் ஒரு வசதியான கட்டண முறையாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, கையில் பணம் குறைவாக இருக்கும் போது, நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் ஆபத்பாந்தவனாக இருக்கிறது கிரெடிட் கார்டுகள், ஆனால் அவற்றின் பயன்பாடு சில நேரங்களில், எதிர்காலத்தில் நமக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தும். இந்தக் கட்டுரையில், கிரெடிட் கார்டு செட்டில்மென்ட்டின் நுணுக்கங்கள், அதன் விளைவுகள் மற்றும் கிரெடிட் ஸ்கோரில் கிரெடிட் கார்டு செட்டில்மென்ட்டின் தாக்கத்தை எப்படிக் குறைக்கலாம் என்பதைப் பற்றி பேசுவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரெடிட் கார்டு செட்டில்மெண்ட் என்றால் என்ன


கிரெடிட் கார்டு செட்டில்மெண்ட் என்பது குறைந்த தொகையை செலுத்துவதற்கு கடன் அட்டை வழங்குபவருடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதை உள்ளடக்குகிறது, நிதி நெருக்கடிகளின் போது முழுமையாக நிலுவைத் தொகையை செலுத்த முடியாத போது, பயன்படுத்தக் கூடிய ஒரு சாத்தியமான விருப்பமாக செயல்படுகிறது.


கிரெடிட் ரிப்போர்டில் ஏற்படும் எதிர்மறை தாக்கம்


கிரெடிட் கார்டு செட்டில்மென்ட்டின் விளைவு உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் (Credit Score)  எதிர்மறையாக பிரதிபலிக்கிறது, கணக்கு பெரும்பாலும் "settled" அல்லது "partially settled" என்று லேபிளிடப்படுகிறது. இது செலுத்த வேண்டிய முழுத் தொகையும் செலுத்தப்படவில்லை என்று சமிக்ஞையை உங்களுக்கு க்டன் கொடுக்க முன் வரும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு கொடுகிறது.


குறையும் கிரெடிட் ஸ்கோர் 


செட்டில் செய்யப்பட்ட கணக்கு, வருங்காலக் கடன்கள், கிரெடிட் கார்டுகள் அல்லது பிற கடன்  முறைக்கு தகுதி பெறுவதில் சவால்களை கொடுக்கும் வகையில், கிரெடிட் ஸ்கோர் அளவை பாதிக்கிறது.


மேலும் படிக்க | 1 ரூ.கோடி டர்ன்-ஓவர் செய்யும் விவசாயி! மத்திய அரசின் Billionaire award பெறும் ரமேஷ் நாயக்


எதிர்காலத்திற்கான கடன் தகுதி: 


செட்டில் செய்யப்பட்ட கணக்குகளின் வரலாறு, கடன் வழங்குபவர்களுக்கு, கடனை ஒழுங்காக திரும்ப செலுத்த முடியாதவர் என்ற முத்திரையை குத்தலாம். இதன் விளைவாக அதிக வட்டி விகிதங்களில் கடன் கொடுக்க முன் வரலாம். அல்லது அடுத்தடுத்த கடன் அட்டைகள் அல்லது கடன்களில் கடன் வரம்புகள் குறைக்கப்படலாம்.


கிரெடிட் கார்டு செட்டில்மெண்ட்டின் தாக்கத்தை நிர்வகித்தல்


கடன் வழங்கியவர்களுடன் முறையான ஆலோசனை: 


செட்டில்மெண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், கிரெடிட் கார்டு வழங்குபவருடன் பேச்சு வர்ர்த்தையுல் ஈடுபடுவது முக்கியம். குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் அல்லது நீட்டிக்கப்பட்ட கட்டண விதிமுறைகள், செட்டில்மெண்டிற்கான தேவையைக் குறைத்தல் மற்றும் உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதுகாத்தல் போன்ற திருப்பிச் செலுத்தும் மாற்றுத் திட்டங்களை அவர்கள் வழங்கலாம்.


கிரெடிட் கவுன்சிலிங் மூலம் வழிகாட்டுதலை பெறுதல்:


கடன் ஆலோசனை வழங்கும் முகவர்களிடம் இருந்து ஆலோசனை பெறுவது, கடனைத் செட்டில்மெண்ட் முறையில் இல்லாமல், மேலும் நிலையான நிதி அணுகுமுறையை மேம்படுத்துவதற்கான உத்திகளை வழங்குகிறது.


செட்டில்மெண்டிற்கு பின் பொறுப்பான கிரெடிட் பயன்பாடு: 


கிரெடிட் கார்டு செட்டில்மெண்டிற்கு பிறகு, நீங்கள் பொறுப்பான கிரெடிட் கார்டு பயன்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் பணம் செலுத்துங்கள். குறைந்த அளவில் நிலுவை கட்டணம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் மற்றும் நேர்மறையான நிதி சுயவிவரத்தை உருவாக்க உங்கள் கிரெடிட்டை ஸ்கோரை மீண்டும் ஏற்படுத்துவதில் தீவிரமாக செயல்படவும்.


முடிவுரை


கரெடிட் ஸ்கோர்கள் மற்றும் எதிர்கால கடன் தகுதி ஆகியவற்றில் ஏற்படக்கூடிய தாக்கத்தின் காரணமாக, நிதி நெருக்கடியின் போது, கிரெடிட் கார்டு செட்டில்மென்ட் முறை, கடைசி முயற்சியாக பார்க்கப்பட வேண்டும். கடனளிப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துதல் அல்லது கடன் ஆலோசனை முகவர்களிடம் இருந்து உதவி பெறுதல் போன்ற மாற்று வழிகளை ஆராய்வது, ஆகியவற்றை செட்டில்மெண்டை பரிசீலிப்பதற்கு முன் ஆராய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


மேலும் படிக்க | ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்? வரம்பு மீறினால்... ரிசர்வ் வங்கி விதி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ