Income Tax on Retirement: இந்தியாவின் அனைத்து குடிமக்களும் ஆண்டு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஒருவர் பணி ஓய்வு பெற்றிருந்தால், ஓய்வூதியம் (Pension), பணிக்கொடை (Gratuity) மற்றும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (Employee Provident Fund) ஆகியவற்றுக்கு வரி செலுத்த வேண்டும். அரசு மற்றும் அரசு சாரா ஊழியர்களுக்கு வரிவிதிப்பு செயல்முறையில் வேறுபாடு உள்ளது. ஓய்வுபெறும் போது மொத்தமாகத் தொகை பெறப்பட்டால், அந்த தொகைக்கு அரசு ஊழியர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. ஓய்வூதிய பலன்களுக்கான வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பற்றி இங்கே காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓய்வூதியத்திற்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது?


அரசு மற்றும் அரசு சாரா ஊழியர்களுக்கு வரிவிதிப்பு செயல்முறை வேறுபட்டது. ஓய்வுபெறும் போது மொத்தமாகத் தொகை பெறப்பட்டால், அந்த தொகைக்கு அரசு ஊழியர்களுக்கு (Government Employees) வரி விதிக்கப்படுவதில்லை. மறுபுறம், அரசு சாரா ஊழியர்களில் (Non-Government Employees), ஓய்வூதியத்தில் 100 சதவீதம் குறைவான கருணைத் தொகையைப் பெறுபவர்கள், மொத்தத் தொகையில் 50 சதவீதத்திற்கு வரி செலுத்த வேண்டும். மீதமுள்ள 50 சதவீதம் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் துறை ஊழியர்கள் (Private Sector Employee) பணிக்கொடை உட்பட 100 சதவீதம் ஓய்வூதியம் பெற்றால், மூன்றில் ஒரு பங்கு தொகைக்கு வரி விலக்கு உண்டு.


கிராஜுவிட்டி தொகைக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது? (How much Tax is levied on Gratuity?)


அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது (Retirement) பெறும் பணிக்கொடைத் தொகைக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அரசு சாரா ஊழியர்களுக்கு, வரிவிதிப்பு செயல்முறை இரண்டு வழிகளில் நடக்கிறது.


- 1972 இன் பணிக்கொடைச் சட்டத்தின் கீழ், கிராஜுவிடியாக கிடைத்த தொகையில், நிறுவனத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் 15 நாள் சம்பளம் அல்லது ரூ. 20 லட்சம், எது குறைவோ அதற்கு வலி விலக்கு அளிக்கப்படும்.


- 1972 இன் கிராச்சுட்டி கொடுப்பனவுச் சட்டத்தின் கீழ் வராதவர்களுக்கு, குறைந்த தொகைக்கு விலக்கு பொருந்தும். இது நிறுவனத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் பணிக்கொடை, அரை மாத சம்பளம் அல்லது ரூ. 10 லட்சத்தில் கணக்கிடப்படுகிறது. 


மேலும் படிக்க | SCSS vs Banks Senior Citizen FDs: மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் ஜாக்பாட் திட்டம் எது?


EPF -க்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது? (How much tax is levied on EPF?)


ஓய்வு பெற்ற பிறகு பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தொகையை திரும்பப் பெறுவதற்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின்படி (Income Tax Act), பணிநீக்கம் செய்யப்பட்ட நாளில் பணியாளரின் கணக்கில் இருப்புத் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.


ஓய்வூதிய பலன்களில் தள்ளுபடிகள் கிடைக்கும்


ஓய்வூதிய பலன்களுக்கு (Retirement Benefits) ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்வது அவசியம். இதற்கு, ஓய்வூதிய அறிக்கை மற்றும் படிவம் 16 போன்ற ஆவணங்கள் தேவை. ஓய்வூதிய பலன்களுக்கு பல வரி விலக்குகள் (Tax Deductions) மற்றும் வரி சலுகைகளும் (Tax Exemptions) உள்ளன.


இவற்றின் மூலம் வரிச்சுமையை ஓரளவு குறைக்க முடியும். பழைய வரி முறையின் (Old Tax Regime) மூலம், வருமான வரிச் சட்டத்தின் 80c பிரிவின் கீழ் வரி செலுத்துவோர் (Taxpayers) ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெறலாம்.


மேலும் படிக்க | Budget 2024: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு... 8வது ஊதியக் கழு, சம்பள உயர்வு!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ