ரூ.10,000 SIP மூலம் ரூ.1 கோடி கார்பஸ் சேர்க்க எவ்வளவு காலம் ஆகும்? முழு கணக்கீடு இதோ
Investment Tips: ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தில் (SIP) மாதம் ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம், 1 கோடி ரூபாய் ஓய்வூதியத்தை உருவாக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம்.
Investment Tips: பணத்தை ஈட்ட நாம் அளிக்கும் முக்கியத்துவத்தை சேமிப்பிலும் அளிப்பது மிக அவசியம். எந்தவொரு சேமிப்பு அல்லது முதலீட்டுத் திட்டமாக இருந்தாலும், அதில் பெரிய கார்பஸை உருவாக்க, இள வயதிலேயே முதலீட்டைத் தொடங்குவதுதான் மிக முக்கியம். இது மியூசுவல் ஃபண்டுகளுக்கும் பொருந்தும். பணம் பெருக போதுமான நேரம் கொடுத்தால்தான் கூட்டுப் பலன், அதாவது காம்பவுண்டிங்கின் பலன் கிடைக்கும்.
காம்பவுண்டிங் முறையில், முதலில் உங்கள் உண்மையான முதலீட்டின் மூலம் வருமானம் ஈட்டப்படும். பின்னர் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் உங்களுக்கு மேலும் வருமானத்தை ஈட்டித் தரும். காலப்போக்கில், இது அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. மியூச்சுவல் ஃபண்டுகள் (Mutual Funds) முதலீட்டாளர்களுக்கு மொத்த தொகை அல்லது SIP முதலீடுகள் மூலம் பெரும் செல்வத்தை உருவாக்குவதற்கு இதுவே காரணம்.
ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தில் (SIP) மாதம் ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம், 1 கோடி ரூபாய் ஓய்வூதியத்தை உருவாக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம். இங்கே நாம் 10%, 12% மற்றும் 14% வருடாந்திர வருமான விகிதத்தின் அடிப்படையில் கணக்கீடுகளைச் செய்வோம். மியூச்சுவல் ஃபண்ட் SIP மீதான வருமானம் தொடர்பான கடந்தகால போக்குகள் 10-14% CAGR -ஐ எளிதில் அடைய முடியும் என்பதை காட்டுகின்றன.
ஒரு உதாரணத்தின் மூலம் இந்த கணக்கீட்டை புரிந்துகொள்ளலாம். 25 வயதுடைய முதலீட்டாளர், ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 முதலீடு செய்து, வெவ்வேறு வருமான விகிதங்களில் ரூ.1 கோடியை எவ்வாறு எட்ட முடியும் என்பதைப் பார்ப்போம். 10%, 12% மற்றும் 14% வருடாந்திர வருமானங்கள் மூலம் எவ்வளவு காலத்தில் இலக்கை எட்ட முடியும் என்பதை இங்கே காணலாம்.
SIP இல் 10% வருடாந்திர வருமானம்
1 கோடியை எட்டுவதற்கான கால அளவு: 22.5 ஆண்டுகள் (வயது 47.5 வயது)
மொத்த முதலீடு: ரூ.27 லட்சம்
மதிப்பிடப்பட்ட வருமானம்: ரூ.74.64 லட்சம்
22.5 ஆண்டுகளில் மொத்த கார்பஸ்: ரூ 1.02 கோடி
இந்த உதாரணத்தில் உள்ள 25 வயது இளைஞன் SIP மூலம் மாதம் ஒன்றுக்கு 10,000 ரூபாய் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து 10% வருடாந்திர வருமானத்தைப் பெற்று 22.5 ஆண்டுகளில் கோடீஸ்வரனாகலாம்.
SIP இல் 12% வருடாந்திர வருமானம்
1 கோடியை ஈட்டுவதற்கான நேரம்: 20 ஆண்டுகள் (வயது 45)
மொத்த முதலீடு: 24 லட்சம்
மதிப்பிடப்பட்ட வருமானம்: ரூ.76 லட்சம்
மொத்த கார்பஸ்: ரூ 1 கோடி
ரூ.10,000 எஸ்ஐபி முதலீட்டில் 12% வருடாந்திர வருமானத்தில், ரூ.1 கோடி ஓய்வூதிய இலக்கை 20 ஆண்டுகளில் அடையலாம்.
SIP இல் 14% வருடாந்திர வருமானம்
1 கோடியை ஈட்டுவதற்கான நேரம்: 18.5 ஆண்டுகள் (வயது 43.5 வயது)
மொத்த முதலீடு: ரூ.22.2 லட்சம்
மதிப்பிடப்பட்ட வருமானம்: ரூ.83 லட்சம்
மொத்த கார்பஸ்: ரூ.1.05 கோடி
14% வருமானத்தில், முதலீட்டாளர் வெறும் 18.5 ஆண்டுகளில் ரூ.1 கோடி கார்பஸ் இலக்கை அடையலாம்.
இந்த எடுத்துக்காட்டின் வாயிலாக, SIP மூலம் நிலையான மாதாந்திர முதலீடு மூலம், ஒருவர் மிகக் குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக முடியும் என்பது தெளிவாகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ