சேமிப்பு என்பது அனைவருக்கும் அத்தயாவசியமான ஒன்றாகும். பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு, சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைப்பதற்கு, அவசர தேவைக்கு பணம் எடுப்பதற்கு என, அனைத்திற்கும் சேமிப்பு கணக்கு என்பது அத்தியாவசியமாக இருக்கிறது. மாணவர்களுக்கான சலுகைகளில் இருந்து, அரசின் சலுகைகள் வரை, அனைத்தும் தற்போது வங்கி கணக்குகளைைத்தான் வந்தடைகின்றன. இப்படி, அத்தியாவசிய தேவை இருக்கும் வங்கி கணக்குகளை, ஒருவர் ஒன்றுக்கும் அதிகமாக வைத்திருக்கலாமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவருக்கு எத்தனை வங்கி கணக்குகள் இருக்கலாம்?


மக்கள் பலருக்கு, ஒருவர் எத்தனை வங்கி கணக்குகளை வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த சந்தேகங்கள் எழலாம். இதற்கு ஆர்பிஐ கூறும் பதில் என்ன தெரியுமா? ஒருவர், எத்தனை வங்கி கணக்குகளை வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாமாம். இவ்வளவுதான் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தனிப்பட்ட வரம்புகள் எதுவும் கிடையாது. 


ஒரு சிலர், தான் படிக்கும் காலங்களில் வங்கி கணக்குகளை தொடங்கியிருப்பர். அந்த நேரங்களில் அவர்களின் கணக்கு சேமிப்பு கணக்கு போல மட்டுமே செயல்படும். அதில் அரசு கொடுக்கும் சலுகைகள், பெற்றோர் பணம் செலுத்துதல் போன்ற பரிவர்த்தனைகள் நடைபெறும். எப்போதாவது, பணத்தை எடுக்கும் சூழ்நிலை உருவாகலாம். வேலைக்கு சென்ற பின்பு, சம்பளத்திற்காக இரண்டு அல்லது மூன்று கணக்குகளை தொடங்கி இருக்கலாம். நமது தேவைக்காக, ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை தாெடங்குவது சகஜமானதாக இருந்தாலும், அதை பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விடுவதால், கண்டிப்பாக அந்த வங்கி கணக்கு நம் கையை விட்டு நழுவி போக வாய்ப்பிருக்கிறது. 


எத்தனை வங்கி கணக்கை தொடங்கினாலும் அதை சரியான முறையில் கையாண்டு, பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு, ஃப்ரீஸ் ஆகாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும். அது மட்டுமன்றி, நாம் பயன்படுத்தாமல் விட்டு விடும் வங்கி கணக்குகள் மூலமாக பல்வேறு மோசடிகளும் நடக்கலாம் என ஆர்பிஐ எச்சரிக்கிறது. எதிர்காலத்தில் பிரச்சனைகள் எழாமல் இருப்பதற்கு, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஆர்பிஐ கூறுகிறது. மேலும், உங்கள் கணக்கை பயன்படுத்தி வேறு ஒருவர் மோசடி செய்தாலும் அது உங்கள் தலையில்தான் வந்து விடியும். இதனால் எழும் சட்ட பிரச்சனைகளை நீங்கள் தீர்க்க வேண்டிய சூழலும் உருவாகலாம். எனவே, ஒரு வங்கி கணக்கை தொடங்கினால் அதை சரிவர கவனிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என கூறுகிறது ஆர்பிஐ. 


மேலும் படிக்க | ஆதார் கார்ட் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட UIDAI!


அதிக வங்கி கணக்குகளை வைத்திருப்பதால் எழும் பிரச்சனைகள்:


>அனைத்து வங்கி கணக்குகளிலும் குறிப்பிட்ட அளவு தொகையை மினிமம் பேலன்ஸ் ஆக வைத்திருக்க வேண்டும் என்பது வங்கிகளின் கோட்பாடாகும். அந்த குறிப்பிட்ட அளவை தாண்டும் போது, நாம் இதற்கு ஒரு பெனாலிட்டி தொகை கட்ட வேண்டி வரலாம். எனவே, அதை தவிர்க்க குறைவான அளவு வங்கி கணக்குகளை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். 


>நாம், 2 வருடங்களுக்கு மேலாக அந்த கணக்கு செயல்படவில்லை என்றால் ஆர்பிஐ விதிமுறைகளின் படி, அந்த கணக்கு முடக்கப்பட்டுவிடும். அதை மீண்டும் செயல்படுத்த பெனாலிட்டி தொகை கட்ட வேண்டி வரலாம். எனவே, இதை தவிர்க்க, குறைவான அளவு வங்கி கணக்குகளை வைத்து கொள்ளலாம். 


>வங்கி கணக்குகளில் ஏற்படும் பண பரிவர்த்தனைகளை கணக்கிடுகையில், உங்களிடம் அதிக வங்கி கணக்குகள் இருந்தால் அந்த செலவுகளை கணக்கு பார்க்க முடியாமல் போகலாம். எனவே, இதையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: அகவிலைப்படியை தொடர்ந்து இந்த அலவன்சுகளில் 25% ஏற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ