PF கணக்கிலிருந்து ஒரே நேரத்தில் எவ்வளவு தொகையை எடுக்க முடியும்? இதற்கான விதிகள் என்ன?
EPFO Update:Body:மாதா மாதம் தங்கள் சம்பளத்திலிருந்து இபிஎஃப் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபசிட் செய்கிறது.
EPFO Update: மாத சம்பளம் பெறும் ஊழியரா நீங்கள்? மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) அனைவரும் இந்த தகவல தெரிந்து வைத்துக்கொள்வது மிக அவசியமாகும். மாதா மாதம் தங்கள் சம்பளத்திலிருந்து இபிஎஃப் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபசிட் செய்கிறது. இந்த தொகை ஊழியர்களின் பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான பாதுகாப்பு நிதியாக பார்க்கப்படுகின்றது.
இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க நினைத்தால், இந்த முடிவை எடுப்பதற்கு முன் நீங்கள் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். PF நிதி என்பது அனைத்து பணியாளருக்கும் ஒரு முக்கியமான நிதியாகும். அதில் பணியாளர்கள் தங்கள் பங்களிப்பை முறையான ஒரு இடைவெளியில் டெபாசிட் செய்கிறார்கள். நிறுவனமும் இதில் சமமாக பங்களிப்பை அளிக்கின்றது. இந்த நிதியானது பணியாளருக்கு ஓய்வு பெறும் நேரத்தில் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை வழங்குகிறது.
பெரும்பாலும் ஊழியர்கள் பிஎஃப் தொகையை பணி ஓய்வுக்கு பிறகு எடுத்தாலும், சில சந்தர்ப்பங்களில் ஓய்வுக்கு முன்னரும் இந்த தொகையை எடுக்கலாம். அதற்கான சில வழிமுறைகள் உள்ளன. பகுதியளவு தொகையை எடுக்க வரம்பு உள்ளதா? எந்த தேவைக்கு எவ்வளவு தொகையை எடுக்க முடியும்? புதிய வீடு கட்டுவதற்கோ அல்லது வாங்குவதற்கோ பிஎஃப் தொகையிலிருந்து (PF Amount) 90 சதவீதம் வரை எடுக்கலாம். இது தவிர, மருத்துவ அவசரநிலை, வீட்டுக் கடன் செலுத்துதல் மற்றும் திருமணம் போன்ற காரணங்களுக்காகவும் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம்.
PF கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றி இங்கே காணலாம்:
- புதிய வீடு அல்லது நிலம் வாங்குதல்: புதிய வீடு அல்லது நிலம் வாங்க பணம் தேவைப்பட்டால், ஊழியர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். இதற்கு குறைண்டபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 50 ஆயிரத்துக்கு குறைவான தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதில்லை.
- மருத்துவ அவசரநிலை: ஊழியர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் மாதச் சம்பளத்தை விட 6 மடங்கு தொகையை எடுத்து பயன்படுத்தலாம்.
- திருமணத்திற்கான நிதி: PF கணக்கு வைத்திருப்பவர் தனது அல்லது குடும்பத்தில் உள்ள ஒரு உறவினரின் திருமணச் செலவுகளைச் செய்ய பிஎஃப் நிதியிலிருந்து பணத்தை எடுக்கலாம். இதில் 50% பங்களிப்பும் அதற்கான வட்டியும் அடங்கும்.
- ஓய்வு: ஊழியர் 58 வயதை நிறைவு செய்தால், அவர் PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட முழு நிதியையும் எடுக்கலாம். இந்தத் தொகையில் 90% வரை ஒரே நேரத்தில் எடுக்க முடியும்.
- வேலையின்மை: ஒரு நபர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருந்தால், பிஎஃப் கணக்கில் இருந்து முதல் மாதத்தில் 75 சதவீதமும், இரண்டாவது மாதத்தில் மீதமுள்ள தொகையும் எடுக்கலாம்.
- கடனைத் திருப்பிச் செலுத்த: கடனைத் திருப்பிச் செலுத்த உங்கள் PF கணக்கிலிருந்தும் பணத்தை எடுக்கலாம்.
PF இலிருந்து பணம் எடுக்கும்போது சில நிபந்தனைகள் பொருந்தும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வரி மற்றும் பிற முக்கிய விதிகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ