நொடிக்கு நொடி அதிகரிக்கும் கூகுள் வருமானம்! லாபத்தை அள்ளும் ஆல்ஃபபெட் கடந்து வந்த பாதை!

Alphabet Earns Whopping Profit: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் வருமானம் கடந்த பத்து ஆண்டுகளில் 615% உயர்ந்துள்ளது, வினாடிக்கு எவ்வளவு லாபம் தெரியுமா?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 22, 2024, 10:10 AM IST
  • விநாடிக்கு கூகுள் எவ்வளவு சம்பாதிக்கிறது
  • அசத்தும் ஆல்ஃபபெட் நிறுவனம்
  • வியக்கவைக்கும் அபார லாபம்!
நொடிக்கு நொடி அதிகரிக்கும் கூகுள் வருமானம்! லாபத்தை அள்ளும் ஆல்ஃபபெட் கடந்து வந்த பாதை! title=

Unimaginable Income Of Alphabet: கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனத்தின் நிகர வருமானம் ஒரே தசாப்தத்தில் 615 சதவீதம் உயர்ந்துள்ளது, என்பது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த சாதனை லாபம் என்பது, ஆப்பிள் நிறுவனத்தை விட 8 மடங்கு அதிகம் என்பதும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லாபத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பெரும் லாபத்தை ஈட்டும் ஆல்ஃபபெட் நிறுவனம்

பணவீக்கம் மற்றும் விளம்பரங்கள் குறைந்த நிலையில், 2022ஆம் ஆண்டில் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் நிகர லாபம் கிட்டத்தட்ட 35 சதவிகிதம் குறைந்த நிலையில், ஒன்றரை ஆண்டில் மீண்டு வந்து சாதனை படைத்துள்ளது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட். நஷ்டத்தில் இருந்து மீண்டு, நொடிக்கு $3,042 (கிட்டத்தட்ட 2,53,444 ரூபாய்) சம்பாதித்து வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்த பிரபல நிறுவனம் இதற்கு எடுத்துக் கொண்ட காலம் வெறும் 18 மாதங்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது.

இந்த அபார லாபம் தொடர்பாக AltIndex.com செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஆண்டின் முதல் காலாண்டில் (Q1 of 2024) ஒரு வினாடிக்கு ஆல்ஃபாபெட் சம்பாதிக்கும் வருமானம் என்பது 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும்போதுட 43 சதவீதம் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி,விவரம் இதோ

AltIndex.com தரவுகள்

கூகிளின் தாய் நிறுவன நிகர வருமானம் ஒரு தசாப்தத்தில் 615 சதவீதம் உயர்ந்துள்ளது என்று கூறும் AltIndex.com அறிக்கையில், இந்த லாபமானது ஆப்பிள் நிறுவனத்தை விட 8 மடங்கு அதிகமாகவும் மைக்ரோசாப்டை விட இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிநீக்க அதிரடி நடவடிக்கை

கடந்த ஆண்டு (2023) மட்டும், கூகுள் நிறுவனம் தனது பணியாளர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது, அந்த நடவடிக்கை இந்த ஆண்டும் பணிநீக்கம் தொடர்ந்தது. பணிநீக்க நடவடிக்கை மற்றும் பிற செலவினங்களுக்காக நிறுவனம் 2.1 பில்லியனுக்கும் அதிகமாக செலவு செய்த போதிலும் அதன் வருவாய் மற்றும் நிகர வருமானம் இன்னும் கணிசமாக அதிகரித்து, இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த மூன்று மாதங்களில் Alphabet இன் நிகர வருமானம் $23.6 பில்லியனாக இருந்தது, இது ஒரு வருடத்திற்கு முந்தைய இதே காலத்தை விட 57 சதவீதம் அதிகம் என்று Statista மற்றும் அதிகாரப்பூர்வ நிறுவனத் தரவுகள் தெரிவித்திருந்தன.

நிறுவனத்தின் நிகர வருமானம் உயர்ந்திருப்பது ஒருபுறம் என்றால் அதன் பங்கு மதிப்பு  2024ம் ஆண்டு முதல் நாளன்று $430 பில்லியன் உயர்ந்துள்ளது.

ஜனவரி மாதத்தில் ஆல்பாபெட்டின் சந்தை மதிப்பு $1.76 டிரில்லியன் ஆகும். கடந்த வாரம் இது 24 சதவீதம் அதிகரித்து $2.19 டிரில்லியனை எட்டியுள்ளது, இது அமேசானின் பங்கு விலை வளர்ச்சியை விட 2 சதவீதம் அதிகம் என்பதும், மைக்ரோசாப்டின் வளர்ச்சியை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | வேலையின்மை பிரச்சனையால் இந்திய பொருளாதர முன்னேற்றம் பாதிக்கப்படலாம்! எச்சரிக்கும் ஆய்வறிக்கை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News