IRCTC Insurance Premium Latest Update: ரயில் பயணங்கள் மிகவும் வசதியானவை, இந்தியாவில் ரயில் போக்குவரத்து மக்களின் இடம் பெயர்தலையும், மாநிலங்கள், மொழி என பல விஷயங்களை கடக்க உதவுகிறது. பயணம் என்றாலே அதில் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம் தான். அண்மையில் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் நான்கு பயணிகள் காயமடைந்தனர், அதில் பயணி ஒருவரின் கையும் துண்டானது.
ராய்பூர் மற்றும் உர்குரா இடையே நடந்த இந்த விபத்து போல, இந்தியாவில் தினமும் ரயில் விபத்துகள் நடக்கின்றன. ரயில் தடம் புரள்வது, சிக்னல் பிழை என விபத்துக்கான காரணங்கள் மாறிக்கொண்டே இருந்தாலும், விபத்து என்பது எதிர்பாராமல் நடைபெறுவது என்பது உண்மை. ஆனால், எதிர்பாராத ரயில் விபத்துகளால் பலரின் வாழ்க்கை தடம் புரண்டு விடுகிறது.
இதுபோன்ற விபத்துகளை கருத்தில் கொண்டு, ரயில்வே பாதுகாப்புக்காக சில சுகாதார காப்பீடுகளை வழங்கியுள்ளது. இந்தக் காப்பீட்டில் வெறும் 45 பைசாவுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு செய்துக் கொள்ளலாம்.
ரயில்வேயின் சுகாதார காப்பீடு
ரயில்வேயில் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளில் உறுதிசெய்யப்பட்ட மற்றும் RAC டிக்கெட்டுகளுக்கு இந்த காப்பீடு கிடைக்கிறது, ஆனால் கவுண்டரில் வாங்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த காப்பீடு செல்லாது. அதோடு, முழு டிக்கெட் எடுத்தவர்களுக்கு மட்டுமே ஐஆர்சிடிசியின் சுகாதார காப்பீடு பொருந்தும்.
இதன் பொருள் என்னவென்றால், அரை டிக்கெட்டுகளைக் கொண்ட குழந்தைகள் சுகாதார காப்பீடு (Insurance) கொள்கைக்கு தகுதி பெற மாட்டார்கள், இது முழு டிக்கெட்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும்.
இன்சூரன்ஸ் க்ளெய்ம்
பயணிக்கும் ரயில் தடம் புரண்டு, அதனால் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது இறந்தாலோ, காப்பீடு தொகை வழங்கப்படும். அதேபோல, இரண்டு ரயில்கள் மோதியதால், பயணிகள் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டால், அவர்களுக்கும் காப்பீடு கிடைக்கும்.
ரயிலில் தீவிரவாத தாக்குதல் நடந்தாலும், பயணிகளுக்கு இழப்பு ஏற்பட்டாலும் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். ரயில் விபத்துகளுக்கான இழப்பீடு என்பது பயணிகளின் காயங்களின் அளவைப் பொறுத்தது.ஆனால், பயணத்தின் போது மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே இழப்பீடு அல்லது காப்பீடு வழங்குவதில்லை என்பதும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய முக்கியமான விஷயமாகும்.
காப்பீடு எடுக்க விதிமுறைகள்
இந்த ரயில்வே டிராவல் ஹெல்த் காப்பீடு எடுக்க விரும்புபவர்கள், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது காப்பீட்டு பாலிசி விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். காப்ப்பீட்டு நிறுவனம், பயணிகளின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்பும்.
உங்கள் மொபைல் எண்ணில் வரும் இந்த செய்தியில் காப்பீட்டு நிறுவனத்தின் பெயர் மற்றும் காப்பீட்டு சான்றிதழ் இருக்குக்ம். இதனுடன் உங்களுக்கு ஒரு இணைப்பும் வழங்கப்படும். இதன் மூலம் உங்கள் நாமினியின் பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இது தவிர, இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு மெயிலில் ஒரு எண்ணைத் தருகிறது. இந்த எண்ணில் இருந்து காப்பீடு பற்றிய தகவல்களைப் பெறலாம்.
காப்பீட்டை கோருவது எப்படி?
சம்பவம் நடைபெற்ற 4 மாதங்களுக்குள் காயமடைந்த தரப்பினரால், அவர்களது நியமனதாரர் அல்லது அவர்களது வாரிசு மூலம் காப்பீட்டு நிறுவனத்திடம் கோரப்பட வேண்டும். தேவையான ஆவணங்களுடன் காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலகத்தில் க்ளெய்ம் கோரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ