Cash Limit at Home: மனித வாழ்க்கையில் நாம் தினம் தினம் பல வித மாற்றங்களைக் காண்கிறோம். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சமீப காலங்களில் தொழில்நுட்பம் காரணமாக பல வித மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம். அப்படி ஒரு மாற்றம்தான் டிஜிட்டல் பரிவர்த்தனைகள். பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது. அதுவும் கொரோனா பெருந்தொற்றின் காலத்தில் இந்த வகையான பரிவர்த்தனைகள் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய காலகட்டத்தில் முடிந்தவரை அனைத்து இடங்களிலும் ஆன்லைனில் பணம் செலுத்தவே அனைவரும் விரும்புகிறார்கள். இதனால் நாம் வெளியே செல்லும்போது ரொக்கமாக பணத்தை எடுத்துச்செல்வதை தவிர்க்கலாம். பணம் பாதுகாப்பாக இருப்பதற்கு இது மிகப்பெரிய அளவில் உதவுகின்றது. எனினும், இவை அனைத்து ஓரு புறம் இருக்க,  இன்றளவிலும் பலர் ரொக்கமாகவும் பரிவர்த்தனைகளை செய்து வருகிறார்கள். மேலும், இணைய பயன்பாடுகள் பற்றி அவ்வளவாக தெரியாதவர்களும் ரொக்க பரிமாற்றத்தையே விரும்புகிறார்கள். 


எனினும், அவசர தேவைகளுக்காக நாம் அனைவருமே நம் வீடுகளில் ஒரு குறிப்பட்ட அளவு தொகையை எப்போதும் ரொக்கமாக வைத்திருக்கவும் விரும்புகிறோம். வீட்டில் ரொக்கமாக பணத்தை வைத்திருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? வீட்டில் பணம் வைத்திருக்க சில விதிகள் (Cash Limit) உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும்? வரி ஏய்ப்பு, கறுப்புப் பணம் போன்ற பணம் தொடர்பான பல பிரச்னைகளை கட்டுப்படுத்த, அரசு ரொக்கமாக பணம் வைத்திருப்பது தொடர்பான பல விதிகளை வகுத்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


வீட்டில் பணம் வைத்திருப்பதற்கான விதிகள் என்ன?


வருமான வரி விதிகளின் (Income Tax Rules) படி, வீட்டில் பணத்தை வைத்திருப்பதற்கு எந்த வித வரம்பும் கிடையாது. ஒருவர் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருந்தால், அவர் தன்னிடம் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால், தான் வைத்திருக்கும் தொகைக்கான ஆதாரம் அவரிடம் இருக்க வேண்டும். வருமான வரித்துறை அதிகாரிகள் உங்களிடம் இதை பற்றி விசாரித்தால், உங்களிடம் உள்ள தொகைக்கான ஆதாரத்தை நீங்கள் காட்ட வேண்டும். இது தவிர, ஐடிஆர் டிக்லரேஷனையும் (ITR Declaration) நீங்கள் காட்ட வேண்டும். ஒருவர் தன்னிடம் உள்ள பணத்திற்கான ஆதாரத்தை வைத்திருந்தால், அந்த பணம் தவறான வழியில் பணம் ஈட்டப்படவில்லை என்றால், அவர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், கவலை கொள்ளத் தேவையில்லை.


வீட்டில் ரொக்கம்: இதற்கான மற்ற விதிகள் என்ன?


மத்திய நேரடி வரிகள் வாரியத்தின்படி (Central Board of Direct Taxes), 


- ஒரே நேரத்தில் ரூ.50,000 -க்கு மேல் பணம் எடுத்தால், பான் கார்டைக் காட்ட வேண்டும். 


- வருமான வரிச் சட்டத்தின் (Income Ta Act) 194N பிரிவின் கீழ், ஒருவர் ஒரு நிதியாண்டில் (Financial Year) ரூ.20 லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தால், அவர் TDS செலுத்த வேண்டும். 


- இந்த விதி தொடர்ந்து 3 ஆண்டுகளாக வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்யாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


எந்த சந்தர்ப்பங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்? 


ஒருவர் தன் வீட்டில் அதிகப்படியான ரொக்கம் (Cash) வைத்திருந்தால், வருமான வரி அதிகாரிகள் இது குறித்து கேள்வி எழுப்பினால், அந்த பணத்தின் ஆதாரத்தை தெரிவிக்க வேண்டும். அதன் மூலத்தை பற்றி அந்த நபர் கூற முடியாவிட்டால், அவர் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளலாம். அப்படி அந்த நபரால் பணம் வந்த வழியை கூற முடியாவிட்டால், வருமான வரித்துறை, அவர் எவ்வளவு வருமான வரி செலுத்தியுள்ளார் என்பதை சரிபார்க்கிறது. 


மேலும் படிக்க | சீனியர் சிட்டிசன்களுக்கு இனி டபுள் வருமானம்.. FD வட்டியை உயர்த்திய ICICI வங்கி


வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படும்போது, அதில் காட்டப்படாத பணம், வீட்டில் இருந்தால், வருமான வரித்துறை (Income Tax Department) உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அப்படி பிடிபட்ட தொகையில், 137% வரை உங்களிடமிருந்து வரி வசூலிக்கப்படும்.


ஐடிஆர் தாக்கல் செய்பவர்களுக்கு நிவாரணம்


இந்த விஷயத்தில் ஐடிஆர் தாக்கல் செய்தவர்களுக்கு (ITR Filing) ஓரளவு நிவாரணம் கிடைக்கும். இந்த நபர்கள், நபர்கள் டிடிஎஸ் (TDS) செலுத்தாமல் வங்கிகள், தபால் அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கிக் கணக்கில் இருந்து ஒரு நிதியாண்டில் ரூ.1 கோடி வரை பணத்தை எடுக்கலாம். 


- ஓரு ஆண்டில் ரூ.1 கோடிக்கு மேல் வங்கியில் இருந்து பணம் எடுத்தால் 2% டிடிஎஸ் செலுத்த வேண்டும். 


- கடந்த மூன்று ஆண்டுகளாக நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால், ரூ.20 லட்சம் பரிவர்த்தனைகளுக்கு (Cash Transactions) 2% டிடிஎஸ் செலுத்த வேண்டும்.


- கடந்த மூன்று ஆண்டுகளாக நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால், ரூ.1 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு 5% டிடிஎஸ் செலுத்த வேண்டும்.


கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைக்கான விதிகள் என்ன?


- கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஒரே நேரத்தில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டால் அது ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். 


-  பொருட்கள் அல்லது சேவைகளை பெற, ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்த முடியாது. அப்படி செய்ய வேண்டுமானால், அதற்கு பான் (PAN) மற்றும் ஆதாரை (Aadhaar) காட்ட வேண்டும்.


மேலும் படிக்க | Bill Gates: பில் கேட்ஸ் போல கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ