Bill Gates: பில் கேட்ஸ் போல கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!

Bill Gates: உலகின் தலைசிறந்த பணக்காரர்களுள் ஒருவர், பில்கேட்ஸ். இவரைப்போல பணக்காரர் ஆக வேண்டும் என பலர் நினைத்துக்கொண்டிருப்பர். அவர்களுக்கான டிப்ஸ், இதாே.   

Written by - Yuvashree | Last Updated : Feb 12, 2024, 07:24 PM IST
  • டாப் பணக்காரர்களுள் ஒருவர், பில் கேட்ஸ்.
  • இவர் ரிச் ஆக காரணம் என்ன?
  • இதோ கோடீஸ்வரராக டிப்ஸ்!
Bill Gates: பில் கேட்ஸ் போல கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்! title=

Habits of Bill Gates To Become Rich: உலகின் டாப் பணக்கார தொழிலதிபர்களுள் ஒருவர், பில் கேட்ஸ். இவரது சொத்து மதிப்பு, கடந்த ஆண்டின் படி 110 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். பில் கேட்ஸ், எவ்வளவுக்கு எவ்வளவு பணம் படைத்தவராக இருக்கிறாரோ, அதே அளவிற்கு பெரிய மனம் படைத்தவராகௌம் உள்ளார். பிறருக்கு உதவி செய்வதற்காக ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கி தன்னை போல பணக்காரர்களாக இருப்பவர்களை அந்த நிறுவனத்தின் மூலம் உதவி செய்ய ஊக்குவிக்கிறார். இதை, அவர் தனது முன்னாள் மனைவி மெலிண்டா மற்றும் இன்னொரு பணக்காரரான வாரன் பஃப்ஃபே ஆகியோருடன் இணைந்து தொடங்கினார். 

பலர், உலக பணக்காரர்களை தங்களின் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அவர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களை பார்த்து, தங்களின் வாழ்விலும் நடைமுறைப்படுத்துவர். அப்படி, பில் கேட்ஸ் போல தானும் பணக்காரர் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள், அவரின் பழக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ இதை படிங்க. 

அறிவு தாகம் அடங்கவே கூடாது:

பில்கேட்ஸ், தினமும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொண்டே இருப்பாராம். பல்கலைக்கழக படிப்பை இடையில் விட்டவர் என்றாலும், தினசரி வாழ்க்கை பாடத்தை கற்க தவறாதவர் இவர். தனக்கு கணினி மீதுதான் நாட்டம் அதிகம் என்றாலும், பிற துறைகளிலும் ஆர்வம் கொண்டு அது குறித்த விஷயங்களையும் கற்றுக்கொள்வாராம். இந்த அறிவு தாகமே ஒரு மனிதனை பெரிய அளவில் உயர்த்தும் என்பதை நம்புபவர், பில் கேட்ஸ். மேலும், படிப்புதான் ஒருவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பதை நம்பும் இவர், அதற்காக தனியாக சில சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். 

நிறைய படிப்பார்:

பில் கேட்ஸ் அதிகமாக புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கொண்டவராம். சிறு வயதில் இருந்தே என்சைக்லோப்பீடியா (கலைக்களஞ்சியம்), சயின்ஸ் ஃபிக்‌ஷன் புத்தகங்கள் என அனைத்தையும் படிப்பாராம். தனக்கு தலைக்கு மேல் வேலை இருக்கும் தினமாக இருந்தாலும் சரி, வேலையே இல்லாத தினமாக இருந்தாலும் சரி, எல்லா நாட்களிலும் புத்தகம் படிப்பதாக அவர் கூறியிருக்கிறார். இது, உலகை நன்கு புரிந்து கொள்வதற்கான வழியாக தனக்கு தோன்றுவதாக கூறியிருக்கிறார். பில்கேட்ஸ், சில புத்தகங்களை படிக்க வேண்டும் என்று பரிந்துரையும் செய்வார். 

மேலும் படிக்க | Budget 2024: பட்ஜெட்டில் வட்டி விகிதங்கள் தொடர்பாக ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்ப்பார்ப்புகள் என்ன?

கூட்டாளர்களை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்வார்:

நிதித்துறை சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு பில் கேட்ஸிற்கு நிகர் அவரேதான் என கூறுவர். அந்த அளவிற்கு, தனது வணிகத்திற்கு தேவையான முடிவுகளை நல்ல முறையில் எடுப்பதற்கு தயங்காதவர் இவர்.  தனது பிசினஸ் பார்ட்னரையும் நன்கு ஆராய்ந்த பிறகே தேர்ந்தெடுப்பார். இது, இவரது தொழில்கள் நல்ல வருமானம் பார்ப்பதற்கு பெரிய காரணமாக இருந்துள்ளது. தன்னால் அவர்கள் வளர வேண்டும், அவர்களால் தானும் வளர வேண்டும் என்று நினைப்பவர் இவர். 

தனது கனவை நம்பியவர்..

நம் கனவை யார் நம்புகிறார்களோ இல்லையோ, நாம் முதலில் அதை நம்ப வேண்டும் என பலர் கூற கேட்டிருப்போம். இதையே பில்கேட்ஸும் கூறுகிறார். இவருக்கு, கணினி மீது 7ஆம் வகுப்பு படிக்கும் போதே அதீத ஆர்வம் இருந்துள்ளது. இவரது ஆர்வத்தை, இவர் படித்த பள்ளியும் மேலும் தூண்டியுள்ளது. அந்த சிறுவயதில் கண்ட கனவை எப்படியாவது நிகழ்த்தி முடிக்க வேண்டும் என்று நினைத்த அவர், தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். 

மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்கறீங்களா... ‘இந்த’ கட்டணங்கள் குறித்து எச்சரிக்கையா இருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News