EPFO Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPFO) மூலம் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் ஊழியர்களின் சிறந்த நிதி பாதுகாபு திட்டமாக விளங்குகிறது. இதன் மூலம் பணி ஓய்வுக்குப் பிறகான காலத்திற்கு ஒரு நல்ல தொகை சேர்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல், ஓய்வூதியத்திற்கான ஏற்பாட்டையும் செய்துகொள்ளலாம். EPFO -இன் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்களுக்கு வழக்கமான ஓய்வூதிய வசதி கிடைக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கான முக்கிய விதிகள்


இபிஎஃப்ஓ மூலம் நிர்வகிக்கப்படும் EPS ஓய்வூதியம் தொடர்பான சில விதிகளும் உள்ளன. EPFO இலிருந்து ஓய்வூதியம் பெற எந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்? அதிகட்சமாக எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


EPS and EPF Contribution: இபிஎஸ் மற்றும் இபிஎஃப் பங்களிப்பு


ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள (அடிப்படை + அகவிலைப்படி) தொகையில் ஒவ்வொரு மாதமும் 12 சதவீதத்தை EPF இல் டெபாசிட் செய்யப்படுகிறது. அதே அளவு தொகையை முதலாளி/நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. ஆனால் முதலாளி/நிறுவனத்தின் பங்கு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) செல்கிறது, 3.67% EPF க்கு செல்கிறது.


EPS Pension: ஓய்வூதியம் பெற இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்


- EPFO இன் விதிகளின்படி, ஓய்வூதிய வசதியைப் பெற, இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) EPS இல் 10 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச பங்களிப்பு அவசியம். 
- அதாவது ஊழியர் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 
- அதிகபட்ச ஓய்வூதிய சேவை 35 ஆண்டுகள் ஆகும். 


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: வலுக்கும் கோரிக்கை, அதிகரிக்கும் அழுத்தம், குட் நியூஸ் கொடுக்குமா மத்திய அரசு?


35 ஆண்டுகள் பணிபுரிந்து இபிஎஸ்-க்கு நீங்கள் பங்களித்தால், அதிகபட்ச ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? இந்த ஓய்வூதியம் எந்த சூத்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.


EPS Pension Calculator: ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


EPS மூலம் நீங்கள் எவ்வளவு ஓய்வூதியம் பெறுவீர்கள் என்பது ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 


இந்த சூத்திரம்: EPS = சராசரி சம்பளம் x ஓய்வூதிய சேவைகாலம் / 70. 


இங்கு சராசரி சம்பளம் என்பது அடிப்படை சம்பளம் + DA ஆகும். இது கடைசியாக பணியில் இருந்த 12 மாதங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதிகபட்ச ஓய்வூதிய சேவை காலம் 35 ஆண்டுகள். ஓய்வூதிய கிடைக்கக்கூடிய அதிகபட்ச ஊதியம் ரூ.15 ஆயிரம். அந்த வகையில், அதிகபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ 15000x8.33= ரூ 1250 ஆகிறது.


Maximum Pension: சூத்திரத்தின் அடிப்படையில் அதிகபட்ச ஓய்வூதியம் என்னவாக இருக்கும்?


அதிகபட்ச பங்களிப்பு மற்றும் சேவையின் ஆண்டு அடிப்படையில் EPS ஓய்வூதிய கணக்கீட்டை நாம் புரிந்து கொண்டால், மாதத்திற்கு EPS = 15000 x35 / 70 = Rs 7,500. இதன் மூலம், இபிஎஸ் -இல் இருந்து அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 வரையிலும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 வரையிலும் பெறலாம். இந்த ஃபார்முலா மூலம் உங்கள் ஓய்வூதியத் தொகையையும் கணக்கிடலாம்.


நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
- 15 நவம்பர் 1995க்குப் பிறகு ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த EPS ஃபார்முலா பொருந்தும். 
- இதற்கு முந்தைய ஊழியர்களுக்கு வெவ்வேறு விதிகள் உள்ளன.
- EPS விதிகளின்படி, ஒரு ஊழியர் 58 வயதில் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. 
- இருப்பினும், அவர் விரும்பினால், அவர் 58 க்கு முன்பே ஓய்வூதியம் பெறலாம். 
- இதற்கு, எர்ளி ஓய்வூதியம் என்ற விருப்பமும் உள்ளது.
- இதன் கீழ், 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறலாம். 
- ஆனால் நீங்கள் 58 வயதுக்கு முன் பணத்தை எடுத்தால், நீங்கள் பெறும் ஓய்வூதியம் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் குறைக்கப்படும்.


மேலும் படிக்க | ஜனவரியில் அகவிலைப்படி 3% அதிகரித்தால், சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ