தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்

Weight Loss Tips: உடல் பருமன் பாடாய் படுத்துகிறதா? தொப்பை கொழுப்பு குறைய மறுக்கிறதா? இதோ உங்களுக்கான டிப்ஸ்.

 

Weight Loss Tips: உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் அதனை குறைக்க பலவித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில குறிப்புகளை பின்பற்றினால் நாம் எளிதாக நம் உடல் எடையை குறைக்கலாம். இதற்கான சில எளிய வீட்டு வைத்தியங்களும் உள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.

 

1 /8

உடல் எடையை குறைக்க, மிக கடினமான, நம்மால் முடியாத பலவற்றை செய்து பார்க்கும் நாம், சில சமயங்களில் மிக எளிய வழிகளை மறந்து விடுகிறோம். தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /8

இலவங்கப்பட்டை: ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூளை ஒரு கப் தண்ணீரில் கலந்து, குறைந்த தீயில் சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் அதை ஆற வைத்து குடித்து வந்தால், விரைவாக எடை குறைவதை காணலாம். இது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.

3 /8

ஓட்ஸ்: தொப்பையை குறைப்பதில் ஓட்ஸ் சிறந்ததாக கருதப்படுகிறது. ஓட்சில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ளது. இது நீண்ட நேரத்திற்கு நிரம்பிய உணர்வை அளித்து பசியைக் குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் நல்ல காலை உணவாக கருதப்படுகின்றது. ஓட்ஸ் சாப்பிடுவது தொப்பை கொழுப்பை குறைக்கவும் உதவும்.

4 /8

காய்கறிகள் மற்றும் பழங்கள்: தொப்பையை குறைப்பதில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவை உடல் எடையை அதிகரிக்காமல் ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன. இந்த உணவுகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இவை வயிற்றுக்கு முழுமையான உணர்வை அளித்து, பசியைக் குறைத்து, தொப்பையை குறைக்கவும் உதவுகின்றன.

5 /8

கிரீன் டீ: கிரீன் டீடிக் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை உட்கொள்வதால், உடல் பருமனை விரைவாகக் குறைக்கலாம். இது உடலுக்கு உடனடி ஆற்றலை அளித்து உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இதை தொடர்ந்து குடித்து வந்தால், வளர்சிதை மாற்றம் மேம்படும். உடல் பருமன் கட்டுக்குள் இருக்கும். கிரீன் டீயில் உள்ள கலவைகள் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களை செயல்படுத்துகின்றன.

6 /8

தயிர்: தயிரில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரோபயாடிக்குகள் உள்ளன. இவை தொப்பை கொழுப்பை வேகமாக கரைக்க உதவுகின்றன. வெயிலில் தயிரை சிலுப்பி மோராக குடிப்பது உடலுக்கு தேவையாக குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் அளிக்கின்றது. இதில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

7 /8

இளநீர்: இளநீரில் பல வித ஆரோக்கியமான நன்மைகள் உள்ளன. இளநீர் தொப்பையை குறைக்க பெரிய வகையில் உதவுகிறது. இது நமது உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் வழங்குகிறது. இதனால் உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் சோர்வும் உடனடியாக சரியாகிறது. இதை குடிப்பது நீண்ட நேரத்திற்கு உடலை நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கிறது.

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.