உங்கள் PF கணக்கிலிருந்து ஒரே நேரத்தில் எவ்வளவு பணம் எடுக்க முடியும்?
PF Account: உங்களது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நீங்கள் பல வழிகளில் எடுக்கலாம். ஆனால் அதற்கான காரணத்தை சரியாக தெரிவிக்க வேண்டும்.
PF Account Withdraw Rules: இந்தியாவில் அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கு PF தொகை பிடிக்கப்படுகிறது. பணியாளரின் வருங்கால தேவையை கருத்தில் கொண்டு இந்த தொகை அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் அதாவது EPFO-ல் பணம் டெபாசிட் செய்யப்படுகிறது. இதில் நிறுவனத்தின் தரப்பிலிருந்தும் ஒரு பங்கு செலுத்தப்படுகிறது. நீங்கள் ஓய்வு பெறும்போது, உங்கள் PF கணக்கில் இருக்கும் இந்த தொகையை எடுத்து கொள்ள முடியும். சில அவசர தேவைக்காக அவர்களது பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை முன்கூட்டியே எடுத்து கொள்கின்றனர். உங்கள் PF கணக்கில் இருந்து என்ன காரணத்திற்காக பணம் எடுக்கிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க | பெண்களுக்கு கைநிறைய வருமானத்தை அள்ளித்தரும் சிறு தொழில்கள்! என்னென்ன தெரியுமா?
அதே சமயம் உங்களால் PF கணக்கில் இருந்து ஒரே நேரத்தில் அனைத்து தொகையையும் எடுக்க முடியாது. EPFO அலுவலகத்தில் நீங்கள் எந்த காரணத்திற்காக PF பணத்தை எடுக்க உள்ளீர்கள் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். இதற்கு பல்வேறு பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் குறைந்த பட்சம் ஐந்தாண்டுகள் வேலை செய்திருந்தால் அல்லது புதிய வீடு கட்ட அல்லது அவசர மருத்துவ செலவு அல்லது திருமண செலவுகளுக்காக 90 சதவீத பணத்தை நீங்கள் எடுத்து கொள்ள முடியும். இது தவிர, வீட்டுக் கடன் போன்ற செலவுகளுக்காகவும் பணத்தை PF கணக்கில் இருந்து எடுத்து கொள்ள முடியும்.
- நீங்கள் திருமண செலவுகளுக்காக பணம் கோரி உள்ளீர்கள் என்றால், உங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து 50 சதவீத பணத்தையும் வட்டியையும் பெற்று கொள்ளலாம்.
- உங்கள் குடும்பத்திலோ அல்லது உங்களுக்கோ மருத்துவ தேவைகளுக்காக பணம் தேவைப்பட்டால், உங்கள் மாதச் சம்பளத்தில் 6 மடங்கு தொகையை உடனடியாக பெற்று கொள்ளலாம்.
- நீங்கள் வேலையில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் முடிவதற்குள் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுத்தால், அதற்கு வரி விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 50 ஆயிரத்துக்கு குறைவாக பணம் எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதில்லை.
- எந்தவொரு பணியாளரும் 58 வயதுக்குப் பிறகு அவரது PF கணக்கில் இருந்து முழு பணத்தையும் திரும்பப் பெறலாம். அதில் 90 சதவீத நிதியை ஒரே நேரத்தில் திரும்பப் பெறலாம். அதே போல ஒரு பணியாளர் அவரது வேலையை இழந்துவிட்டால், ஒரு மாதத்திற்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் அவர் தனது PF கணக்கிலிருந்து 75 சதவீத பணத்தை எடுத்து கொள்ள முடியும். இரண்டு மாதங்களுக்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் மீதமுள்ள பணத்தையும் எடுத்து கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ