EPFO UAN Profile அப்டேட் செய்ய தேவையான ஆவணங்கள்: முழு லிஸ்ட் இதோ

EPFO UAN Update: EPFO புதிய அறிவிப்பின்படி, இப்போது விண்ணப்பதாரர்கள் தங்கள் UAN ப்ரொஃபைலை புதுப்பிக்க, தங்கள் தாய்/தந்தையின் பெயர் கொண்ட ஆதார் அட்டை, பான் கார்டு, தாய்/தந்தையின் பெயர் கொண்ட 10வது மற்றும் 12வது வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 13, 2024, 11:47 AM IST
  • இபிஎஃப் கணக்கில் ஊழியர்கள் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள்.
  • நிறுவனமும் அதே அளவு தொகையை ஊழியரின் கணக்கில் டெபசிட் செய்கிறது.
  • அவ்வப்போது, ஊழியர்கள் இபிஎஃப் கணக்கில் தகவல்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
EPFO UAN Profile அப்டேட் செய்ய தேவையான ஆவணங்கள்: முழு லிஸ்ட் இதோ title=

EPFO UAN Update: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை நிர்வகிக்கின்றது. இபிஎஃப் தொகை ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் உதவும் ஒரு மிகப்பெரிய சேமிப்பாக பார்க்கப்படுகின்றது. இபிஎஃப் கணக்குகள் தொடர்பான பல புதுப்பிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. இவற்றை இபிஎஃப் உறுப்பினர்கள் அப்டேட் செய்து வைத்துக்கொள்வது நல்லது. 

இபிஎஃப் கணக்கில் ஊழியர்கள் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள். நிறுவனமும் அதே அளவு தொகையை ஊழியரின் கணக்கில் டெபசிட் செய்கிறது. இதில் வேலையை மாற்றும் போது, சொந்த விவரங்களை மாற்றும்போது என அவ்வப்போது, ஊழியர்கள் இபிஎஃப் கணக்கில் தகவல்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கொடுக்கப்பட்டுள்ள தகவலை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஊழியர்கள் அதை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால், இபிஎஃப் கனக்கில் (EPF Account) உள்ள தொகை சிக்கிக்கொள்ளலாம்.

UAN தொடர்பான முறைகேடுகளை சரிசெய்வதற்காக, EPFO ​​புதிய அறிவிப்பில் சில தகவல்களை அளித்துள்ளது. கூட்டு அறிவிப்புப் பட்டியலின் (Joint Declaration List) ஆவணங்களில் மாற்றங்கள் செய்வதற்கான வழிமுறைகள் குறித்த தகவலகளை EPFO அளித்துள்ளது. இப்போது ஊழியர்கள் UAN ப்ரொஃபைலைப் (UAN Profile) புதுப்பிக்க இந்த புதிய அறிவிப்பின்படி ஆவணங்களை வழங்க வேண்டும்.

EPFO புதிய அறிவிப்பின்படி, இப்போது விண்ணப்பதாரர்கள் தங்கள் UAN ப்ரொஃபைலை புதுப்பிக்க, தங்கள் தாய்/தந்தையின் பெயர் கொண்ட ஆதார் அட்டை, பான் கார்டு, தாய்/தந்தையின் பெயர் கொண்ட 10வது மற்றும் 12வது வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாம்.  EPFO இல் உள்ள தகவல்களைப் புதுப்பிக்க, இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்.

UAN ப்ரொஃபைலில் பல்வேறு புதுப்பித்தல்களுக்கு தேவைப்படும் பல்வேறு ஆவணங்கள்:

பிறந்த தேதியில் திருத்தம் செய்ய இந்த ஆவணங்கள் தேவை:
- அரசாங்கத்தால் வழங்கப்படும் குடியிருப்பு சான்றிதழ்
- பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்.
- பெயர் மற்றும் பிறந்த தேதியைக் காட்டும் சான்றிதழ்.
- அங்கீகரிக்கப்பட்ட அரசு வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியல். பள்ளியிலிருந்து வெளியேறும் சான்றிதழ் (எஸ்எல்சி)/பள்ளி மாற்றுச் சான்றிதழ் (டிசி)/எஸ்எஸ்சி
- ஆதார் அட்டை
- பாஸ்போர்ட்
- மத்திய/மாநில அரசின் சேவைப் பதிவு அடிப்படையிலான சான்றிதழ்
- பிறந்த தேதிக்கான ஆதாரம் இல்லாவிட்டால், மருத்துவ சான்றிதழ்
- மத்திய/மாநில/யூனியன் பிரதேச அரசாங்கத்தால் வழங்கப்பட்ட CGHS/ECHS/மெடி-க்ளெய்ம் கார்ட்
- தகவல் தொழில்நுட்பத் துறையின் PAN
- மத்திய/மாநில ஓய்வூதியம் செலுத்தலுக்கான ஆணை

மேலும் படிக்க | Business Idea: மக்கள் மருந்தகம் மூலம் பம்பர் வருமானம் பெறலாம்... முழு விபரம் இதோ!

பெயர் மற்றும் பாலின விவரங்களில் மாற்றங்கள் செய்ய இந்த ஆவணங்கள் தேவை:
- ஆதார் (கட்டாயமானது)
- பாஸ்போர்ட்
- இறப்பு சான்றிதழ்
- பிறப்புச் சான்றிதழ்
- ஓட்டுநர் உரிமம்
- பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ் புத்தகம்.
- மத்திய அரசு/மாநில அரசு/யூனியன் பிரதேச அரசு வழங்கிய சேவை புகைப்பட அடையாள அட்டை.
- பெயர் மற்றும் பாலினம் இடம்பெற்றுள்ள பள்ளி விட்டுச் செல்லும் சான்றிதழ் (SLC)/பள்ளி இடமாற்றச் சான்றிதழ் (TC)/SSC வாரியம்/பல்கலைக்கழகம் வழங்கிய சான்றிதழ்/மார்க்ஷீட் 

தாய் / தந்தை பெயர், உறவுமுறையில் மாற்றங்களை செய்ய இந்த ஆவணங்கள் தேவைப்படும்:

- மத்திய/மாநில அரசு வழங்கிய புகைப்பட சான்றிதழ். 
- பெற்றோரின் பாஸ்போர்ட்
- அரசாங்கத்தால் வழங்கப்படும் திருமணச் சான்றிதழ்
- ரேஷன் கார்டு/பிடிஎஸ் கார்டு
- மத்திய/மாநில அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய CGHS/ECHAS/Medi Claim CARS/PSU கார்டு 
- ஓய்வூதிய அட்டை
- பிறப்புச் சான்றிதழ்
- முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் தாலுகா மற்றும் தெஹ்சில் போன்ற பிற அறிவிக்கப்பட்ட அரசு அமைப்புகள் வழங்கிய சான்றிதழ்

திருமண நிலையை புதுப்பிக்க இந்த ஆவணங்கள் தேவைப்படும்:

-  பாஸ்போர்ட்
- ஆதார் அட்டை
- அரசாங்கத்தால் வழங்கப்படும் திருமண சான்றிதழ்
- விவாகரத்து ஆணை

மேலும் படிக்க | எல்எல்ஆர் பெற இனி இ சேவை மையங்களில் முதல் விண்ணப்பிக்கலாம்.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News