உங்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. பொதுவாக நமது அவசர தேவைகளுக்காக சிறிது பணத்தை அனைவரும் சேமித்து வைத்து இருப்போம். முன்பு வீட்டில் வைத்திருந்த பணத்தை தற்போது வங்கிகளில் வைத்துள்ளோம்.  எதிர்காலத்தில் நிதிசுமையை ஏற்றிக்கொள்ளாமல் இருக்க சேமித்து வைப்பது என்பது அவசியமான ஒன்று. அவசர செலவுகள், மருத்துவ செலவுகள் என பலவற்றுக்கு இவை கைகொடுக்கும்.  உங்கள் கணக்கில் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முன் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் 2 மாத நிலுவைத் தொகை!


மாதாந்திர செலவுகள்


வேலைக்கு செல்வோர் தங்களது மாதாந்திர தேவைகள் போக ஒவ்வொரு மாதமும் சில தொகையை வங்கியில் சேமித்து வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. மாத செலவுகளுடன் ஒப்பிடும் போது குறைந்தது ஆறு மடங்கு தொகையை சேமித்து வைக்க பரிந்துரைக்கப்படுகிறது.  காப்பீட்டு பிரீமியங்கள், EMI, கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை, கடன்கள், குழந்தைகளின் கல்விக் கட்டணம் மற்றும் பிற தவிர்க்க முடியாத செலவுகள் போன்றவை ஒவ்வொரு மாதமும் ஏற்படும். இவற்றை தவிர மருத்துவச் சிக்கல்கள், வேலை இழப்பு, வீட்டைப் பழுதுபார்த்தல் போன்ற அவசர தேவைகளுக்கு உங்களின் சேமிப்பு உங்களுக்கு உதவும். 


பணவீக்கம்


தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காலப்போக்கில் பணத்தின் மதிப்பைக் குறைக்கலாம், எனவே இன்று செலவுகளுக்கு சரியாக இருப்பது, நாளை பத்தாமல் போகலாம். எனவே ஒவ்வொரு மாதமும் சில தொகையை சேமித்து வைப்பது உங்களின் எதிர்கால தேவைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வருமானம் சீரற்றதாகவோ அல்லது கமிஷன் அடிப்படையிலானதாகவோ இருந்தால், நீங்கள் பல முறை நிதிப்பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் நிதி ரீதியாக உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உங்களுக்கு போதிய சேமிப்பு தேவை. 


சார்ந்தவர்கள்


உங்கள் வருமானத்தை வைத்து தான் மொத்த வீடும் இருக்கிறது என்றால் நீங்கள் இன்னும் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும். அதிகமான சார்புடையவர்களைக் கொண்டிருப்பது பொதுவாக உங்களுக்கு அதிக செலவுகளை ஏற்படுத்தும்.  மேலும் உங்களுக்கோ அல்லது குடும்ப உறுப்பினருக்கோ தொடர்ந்து உடல்நலப் பிரச்சனைகள் வந்தால் அந்த மாதம் நிச்சயமாக மருத்துவக் கட்டணங்கள் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் உங்கள் வழக்கமான பட்ஜெட் அல்லது சேமிப்பு இலக்குகளை பாதிக்காமல் இந்த செலவினங்களை ஈடுகட்ட அதிக அவசரகால நிதி உதவலாம்.


கடன்


அதிக அளவிலான கடன் இருந்தால் அது உங்களை சேமிக்க முடியாமல் செய்துவிடும்.  குறிப்பாக அதிக வட்டி விகிதங்கள், நிச்சயமற்ற திருப்பிச் செலுத்தும் முறை ஆகியவை உங்களை மேலும் கடனாளி ஆக்கலாம். மேலும், முறையான காப்பீட்டுத் கவரேஜ் எடுத்து கொள்வது அவசரகாலத்தில் நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.  உங்கள் கவரேஜ் எவ்வளவு விரிவானதாக இருக்கிறதோ, அவ்வளவு குறைவாக உங்கள் அவசர நிதியை நம்பியிருக்க வேண்டும்.  


முதலீடு


சம்பளம் எவ்வளவு கம்மியாக இருந்தாலும், அதிக வருமானம் ஈட்டக்கூடிய முதலீடுகளில் கவனம் செலுத்துவதும் அவசியம். உங்கள் சம்பளத்தின் பெரும்பகுதியை முதலீடுகளுக்குப் பயன்படுத்த வேண்டாம். மாறாக அதில் சிறு பகுதியை முதலீடு செய்து நல்லது.  அதே போல உங்கள் சேமிப்புக் கணக்கிற்கான சரியான வங்கியைத் தேர்ந்தெடுப்பது அவசியம். பல வங்கிகள் நல்ல ஆபர்களை கொடுத்தாலும் சில வங்கிகள் மட்டுமே உங்களின் சேமிப்பு கணக்கிற்கு நல்ல வட்டியை தருகின்றன. 


மேலும் படிக்க | வீட்டுக்கடனை வேகமாக அடைக்க வேண்டுமா? ‘இதை’ மட்டும் செய்யுங்கள் பாேதும்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ