7th Pay Commission: மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மத்திய ஊழியர்களின் புதிய உயர்த்தப்பட்ட சம்பளம் மார்ச் 30-ம் தேதியே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை மார்ச் 25-ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் 30-ம் தேதி ஹோலி பரிசு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 31-ம் தேதி விடுமுறை தினம் மத்திய ஊழியர்களின் புதிய சம்பளம் மார்ச் 30-ம் தேதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் திறந்து இருக்கும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அரசு ஏற்கனவே மகிழ்ச்சி செய்தியை அறிவித்தது. இதன் மூலம் ஊழியர்களின் கொடுப்பனவு தற்போது 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த ஊதிய உயர்வு கடந்த ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாத நிலுவைத் தொகை கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்களின் கொடுப்பனவு 50% ஆக உயர்ந்துள்ளதால், வீட்டு வாடகை கொடுப்பனவு அதாவது HRA வும் அதிகரித்துள்ளது.
50 சதவீத டிஏ காரணமாக, மத்திய ஊழியர்களின் குழந்தை கல்வி உதவித்தொகை, விடுதி மானியம், பயணப்படி, பணிக்கொடை உச்சவரம்பு, மைலேஜ் கொடுப்பனவு ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன.